அதன்படி, 2025 ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி, உடற்கல்வி ஆசிரியர் பணியில் இருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆக பதவி உயர்வு பெற, தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலை தயார் செய்து அனுப்ப வேண்டும்.
அந்த வகையில், இந்த பட்டியலில் இளநிலையில் இரட்டை பட்டப் படிப்பு படித்தவர்களின் பெயரை சேர்க்கக் கூடாது. பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதேனும் இருக்கிறதா என்பதை கூர்ந்தாய்வு செய்ய வேண்டும்.
விதிமுறைகளுக்கு முரணாக பெயர் சேர்க்க பரிந்துரைத்தாலோ அல்லது பெயர் விடுபட்டதாக தெரிவித்து முறையீடு ஏதும் பின்னர் பெறப்பட்டாலோ அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முழுப் பொறுப்பை ஏற்க நேரிடும். எனவே, இந்த விவகாரத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...