
one honest friend is better than a hundred fake ones.
நூறு போலி நண்பர்களை விட ஒரு உண்மையான நண்பன் சிறந்தவன்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எனது நோட்டு அல்லது புத்தகத்தில் உள்ள காகிதத்தைக் கிழிக்க மாட்டேன்.
2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுக காரணமாகிவிடும்.
பொன்மொழி :
சண்டையோடு கூடிய வீடுநிறைந்த கொழுமையான சாப்பாட்டைப் பார்க்கிலும், அமைதியோடே சாப்பிடும் எளிய உணவே நலம்.
–சாலமோன் ஞானி
பொது அறிவு :
01.இந்தியாவின் முதல் துணை பிரதமராக பணியாற்றியவர் யார்?
02. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் நீதிபதிகளை கொண்ட உயர்நீதிமன்றம் எது?
English words :
curdled -turned sour
drop by - to visit someone for a short time
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
மனித உடல் & விலங்குகள்
** இரத்த நாளங்கள்:** மனித உடலின் அனைத்து இரத்த நாளங்களையும் ஒன்றாகச் சேர்த்தால், அது பூமியை இரண்டு முறைக்கும் மேல் சுற்றக்கூடும்!
** விலங்குகளின் திசைகாட்டி:** கடல் ஆமைகள், பறவைகள் போன்ற பல விலங்குகள் பூமியின் காந்தப்புலத்தை உணர்ந்து திசையை அறிகின்றன.
** நரம்பு மண்டலம்:** மூளையில் இருந்து உடலுக்கு செல்லும் மின் சமிக்ஞைகளின் வேகம் மணிக்கு 250 மைல்கள் வரை இருக்கும்.
நீதிக்கதை
ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் பெரியதாக தெரிந்தது. நரிக்கு ஏக குஷி. "நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். அதுவும் இந்த காட்டின் ராஜாவாக உள்ள சிங்கத்தை விடவும் பெரியவனாக நான் உள்ளேன் என நினைத்துகொண்டே வேட்டைக்குச் சென்றது. செல்லும் வழியில் நரி ஒரு சிங்கத்தை கண்டது. சிங்கமோ சற்று முன்னர் தான் ஒரு மானை வேட்டையாடி அதை உண்ட களைப்பில் மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தது.
நரியும் தன்னுடைய நிழல் சிங்கதைவிடவும் பெரியதாக இருபதாக நினைத்துகொண்டு சிங்கம் வரும் வழியில் நடந்து சென்றது. சிங்கமும் நரியை ஒன்றும் செய்யாமல் கடந்து சென்றது.
நரிக்கோ ரொம்ப சந்தோஷம். நாம் சிங்கத்தை விடவும் பெரியதாக இருபதனால் சிங்கம் என்னைகண்டு பயந்து சென்றது என நினைத்துகொண்டு அன்று மாலை தன்னுடைய வீட்டிற்க்கு சென்றது.
மாலை வீட்டிற்க்குச் சென்றதும் நரி காட்டில் உள்ள மிருகங்களை எல்லாம் அழைத்தது. அனைத்து மிருகங்களும் நரியின் கூட்டத்திற்கு வந்தன. நரி அனைத்து மிருகங்களிடமும், "இனிமேல் இந்த காட்டிற்கு நான் தான் ராஜா" என்றது.
யானையோ, “இதை நாங்கள் ஏற்க முடியாது என்றது. உடனே நரி காலையில் நடந்த சம்பவத்தைக் கூறி சிங்கமே என்னைக் பார்த்து பயந்து சென்றது” என்றது. கூட்டத்தில் இருந்த மானோ, “சிங்கத்தை உன் முன் மண்டியிடச் சொல் பிறகு உன்னை இந்த காட்டிற்கு ராஜவாக்குகிறோம்” என்றது.
அடுத்த நாள் நரி அந்த சிங்கத்தை தேடிச் சென்றது. செல்லும் வழியில் சிங்கம் தன்னுடைய பாதையை நோக்கி வருவதை கண்டு நரி கர்வத்துடன் நின்றது.
சிங்கம் வந்தவுடன் சிங்கத்தை பார்த்து, "என் முன்னாள் மண்டியிட்டுச் செல்" என்று நரி கூறியது.
சிங்கமோ மிகவும் கோவம்கொண்டு தரக்குறைவாக பேசிய நரியை பார்த்து, "உன்னை மன்னித்து விடுகிறேன் உடனே இங்கிருந்து செல்" என்றது.
நரியோ சிங்கம் தன்னை கண்டு பயந்து விட்டது என நினைத்து “முடியாது” என்று பதில் கூறிக்கொண்டே தன்னுடைய நிழலைப் பார்த்தது. அது மதிய நேரம் என்பதால் நிழல் உண்மையான அளவில் இருந்தது. அப்பொழுது தான் நரிக்கு புரிந்தது சூரிய ஒளியில் தான் தனுடைய நிழல் பெரியதாக இருந்தது என்று.இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கம் நரியை ஒரே அடியினால் கொன்றது.
நீதி: முட்டாள் தனமாக பெரிதாக யோசித்தால் அதற்கான இழப்பும் பெரிதாக இருக்கும்.
இன்றைய செய்திகள்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...