![]() |
| ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் |
Dark days teach the best lessons.
இருண்ட நாட்கள் சிறந்த பாடங்களை கற்றுக் கொடுக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எனது நோட்டு அல்லது புத்தகத்தில் உள்ள காகிதத்தைக் கிழிக்க மாட்டேன்.
2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுக காரணமாகிவிடும்.
பொன்மொழி :
வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கமே மனிதனின் மகத்தான சக்தியாகும் - ஜேம்ஸ் ஆலன்
பொது அறிவு :
01.உலகில் மிக நீண்ட காலம் வாழும் விலங்கு எது?
கிரீன்லாந்து சுறா
Greenland Shark
02. மிகப்பெரிய தமிழ்த்தாய் சிலை எங்கு நிறுவப்பட உள்ளது?
மதுரை -Madurai
English words :
fill-put something into your space, fill out-complete a form by writing information
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
ஆவாரம் பூ: ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாவர மூலிகைகள் எல்லாம் நமக்கு எளிமையாக கிடைக்க கூடியவை. அதில் ஒன்று ஆவாரம்பூ.
ஆவாரம்பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்து சாப்பிடலாம். இந்த பூவை கொதிக்க வைத்து தேநீராக்கி குடிக்கலாம்.
டிசம்பர் 09
நீதிக்கதை
எண்ணம் போல் வாழ்வு
ஒரு ஊரில் குமாரசாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் முட்டாள் என்றும், பிழைக்கத் தெரியாதவர் என்றும் கேலி செய்து வந்தனர். இதைக் கேட்டுக்கேட்டு அந்த மனிதருக்கு வெட்கமாகிப் போய்விட்டது. அந்த ஊரின் எல்லையில் ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் சென்று அந்த மனிதர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கேட்டார்.
கடவுளை நினைத்து தவம் செய். உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார் என்று அந்த முனிவர் கூறினார். குமாரசாமி கடுமையாகத் தவம் இருந்தார். பல நாட்கள் சென்ற பிறகு, கடவுள் அவர் எதிரில் தோன்றினார். பக்தனே, உனக்கு என்ன வரம் வேண்டும்? கடவுள் கேட்டார். தவம் செய்தால் கடவுள் வந்து வரம் கொடுப்பார்னு அந்த முனிவர் சொன்னார். மன்னார்சாமி, என்ன வரம் வேண்டும், கேள் என்றார் கடவுள். அதான் கேட்டேனே வரம்... அதை கொடு... என்றார் மன்னார்சாமி.
இப்போது கடவுளுக்கே குழப்பம் வந்து விட்டது. கடவுள் பிரத்யட்சம் செய்துவிட்டால் யாருக்காவது வரம் கொடுத்தே ஆக வேண்டும். அதுவும் தவம் செய்தவருக்குத் தவறாமல் வரம் கொடுத்தே ஆக வேண்டும். என்ன செய்யலாம்? கடவுள் யோசித்தார். பக்தா, இப்போது நீ என்ன நினைக்கிறாயோ, அதையே வரமாகக் கொடுக்கின்றேன் பெற்றுக்கொள். அய்...யய்ய....யோ... நான் ஒன்றும் நினைக்கவே இல்லையே! அதான்... என்று சொல்லிவிட்டுக் கடவுள் மறைந்து விட்டார். இதிலிருந்து என்ன தெரிகிறது? பலனை நோக்கிய உழைப்புதான் உயர்வைத் தரும்! எண்ணம் போல் வாழ்வும் கூட, மனதில் நல்லதை நினைப்போம் நல்வழி செல்வோம்.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...