Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.12.25

மனித உரிமைகள் நாள்







திருக்குறள்: 

குறள் 384: 

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா 
மான முடைய தரசு. 

விளக்க உரை: 

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

பழமொழி :

Every moment is a gift of life. 

ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையின் பரிசு.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நோட்டு அல்லது புத்தகத்தில் உள்ள காகிதத்தைக் கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுக காரணமாகிவிடும்.

பொன்மொழி :

நீ மகிழ்ச்சி அடைய வேண்டுமானால் மற்றவர்களை மகிழ்ச்சி அடையச் செய் - மார்க் ட்வைன்

பொது அறிவு : 

01. இந்தியாவில் வீர சாகசம் புரியும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் விருது எது?

கீதா சோப்ரா விருது
The Geeta Chopra Award

02.உலகிலேயே விலையுயர்ந்த பழம் எது?
  
யுபாரி கிங் மெலன்
Yubari King Melon

English words :

damages-funny climbed for loss or injury

uproar-public anger or protest

அறிவியல் களஞ்சியம் :

 பூச்சிகளும் புதுமைகளும்:


1.) A ladybird might eat more than 5,000 insects in its lifetime. லேடிபர்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கரும்புள்ளி செவ்வண்டு தன் வாழ்நாளில் தீங்கு தரும் 5,000 பூச்சிகளை உண்டு அழிக்கும்.


2. ) A bee’s wings beat 190 times a second. ஒரு தேனீ ஒரு நொடியில் 190 முறை தன் இறக்கைகளை அடிக்கும்.

டிசம்பர் 10

மனித உரிமைகள் நாள்


ஐக்கிய நாடுகள் அவை 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைப் பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது. அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் தேதி உலக நாடுகள் அனைத்தாலும் ”மனித உரிமை நாள்” கொண்டாடப்படுகிறது.

1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல், டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.

நீதிக்கதை

 பிச்சைக்காரனின் தன்னம்பிக்கை

ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு கணவான் அந்தவழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார். 

அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகவேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, அவனது பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா? என்று கூறிவிட்டு புகைவண்டியில் தனது இருக்கைக்குத் திரும்பினார். 

ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த கணவான் ஒரு விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த விருந்தில் 6 மாதங்களுக்கு முன்னாலே இரயில்நிலையத்தில் பிச்சையெடுத்துக்கொண்டு இருந்தவனும் அமர்க்களமான கோட் மற்றும் டை சகிதமான உடையில் கனகச்சிதமான கணவானாக விருந்தில் பங்குகொள்ள வந்து இருந்தான். அவன் இந்தக் கணவானை அடையாளம் கண்டுகொண்டு இப்படிக்கூறினான். 

அன்பரே... நீங்கள் என்னை மறந்து போகியிருக்கலாம். ஆனால் நான் உங்களால்தான் இப்படி நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன். நான் நல்ல நிலைமைக்கு வருவதற்கு நீங்கதான் காரணம். அந்த கோட் சூட் வாலிபன் கணவானிடம் பழைய நிகழ்வுகளை நினைவூட்டினான். 

கணவான், எனக்கு நினைவுவந்துவிட்டது. இப்போது என்ன செய்கிறாய். உடைகளிலும் நல்ல மாற்றம் தென்படுகிறது, என்னப்பா? என்று கேட்டார். 

கோட் சூட் வாலிபன் சொன்னான், நீங்கள்தான் என்னுடைய மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணம். என்னுடைய வாழ்நாளிலே உங்களை மறக்கமுடியாது. என் வாழ்க்கையில் என்னை ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதர் நீங்கள்தான். 5 ரூபாயை எனது திருவோட்டில் இட்டபின் சிறிது நேரத்திற்குப் பிறகு வந்து அந்த ரூபாய்க்குச் சமமான பென்சில்களை என்னிடமிருந்து பெற்றுச் சென்றீர்கள். 

எனக்குள் ஒழிந்திருந்த வியாபாரி அப்போதுதான் எனக்கே தெரியவந்தான். அதுவரையில் பிச்சையெடுத்துத் திரிந்த நான் அந்த ஒரு நிமிடத்தின் தாக்குதலில் ஒரு வியாபாரியாக உருவெடுத்து உழைக்க ஆரம்பித்தேன். 

அந்த ஒரு நிமிடத்துக்கு முன்னர்வரையில் சோம்பேறியாக அழுக்காக புகைவண்டி நிலையத்தின் பிச்சைக்காரர்களின் வரிசையில் ஒருவனாக யாராலும் மதிக்கப்படாத, உருப்படாதவனாக இருந்த நான் உங்கள் நடவடிக்கையால் திருந்தினேன். 

என்னுள்ளே சாக்ரடீஸின் கொள்கைகளைத் தூண்டிவிட்டவர் நீங்கள்தான். பிறகுதான் சிந்திக்க ஆரம்பித்தேன். நான் யார்? எனது கொள்கை என்ன? எதற்காகவோ பிறந்துவிட்டேன். ஆனால் சாகும்போதாவது எதையாவது சாதித்துவிட்டு சாகலாமே என முடிவெடுத்தேன். பிச்சையெடுப்பதை நிறுத்தி எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் உங்களுக்கு நன்றி கூறுவதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகள் பலகோடி அய்யா, என்றான்.

இன்றைய செய்திகள்

10.12.2025

⭐காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு 7.35 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

⭐மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரிகளை நியமிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு.

⭐இந்தோனேசியாவில் அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் பலி.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀கர்நாடகா மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில்  வெற்றியை பதிவுசெய்தது சௌராஷ்டிரா அணி.

🏀 இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி  ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Today's Headlines

⭐Cauvery Management Authority has ordered the Karnataka government to release 7.35 TMC of water to Tamil Nadu. 

⭐ The central government orders all states to appoint officers for the population census.

⭐20 people were killed in a fire at an office building in Indonesia.

 SPORT NEWS 

🏀Saurashtra won the T20I match between Karnataka and Saurashtra by 1 run.

🏀 The first match of the 5-match T20 series between India and South Africa will be played at the Barapati Stadium in Cuttack, Odisha.

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive