Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்றைய சிந்தனை (17.12.2025)

இன்றைய சிந்தனை - Today's Thought (17.12.2025)

....................................................

*"திறமையும்...! வெற்றியும்,..!!"*

...................................................

ஒரு மனிதனின் வெற்றி. அவர் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை. ஓரளவு பேச்சுத் திறமையுள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்...

கற்பனைக் கதையாய் இருந்தாலும். சாவித்திரியின் திறமை தான் அவர் கணவரது வாழ்வைக் காப்பாற்றியது...

பலமுறை அரசரின் மரண தண்டனையிலிருந்து தெனாலிராமனின் வாக்குத்திறமை காப்பாற்றி இருக்கிறது...

பீர்பாலின் திறமையான பேச்சுக் கதைகளையும் நாம் அறிவோம்...

நம் ஊர்களில் குப்பைப் பொருள்களை திறமையாகப் பேசி, நம்மிடம் புகுத்தும் விற்பனை அலுவலர்களை நாம் அறிவோம்...

நம்மைப் பற்றி நம் பெற்றோர்கள் வருந்தும் போது கூறக்கூடிய வார்த்தை 'கொஞ்சம் கூட திறமை (சாமர்த்தியம்) போதாது இவனுக்கு" என்பது தான்...

இப்போது ஒரு சிறுகதை...

ஒரு நிறுவனத்தில் செயலர் பதவிக்குப் பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் கேட்கப்பட்டது ஒரே கேள்வி...

'பத்தடி ஆழம். பத்தடி அகலம் கொண்ட குழியில் நீங்கள் வீழ்ந்து விட்டால் "எப்படி வெளியே வருவீர்கள்...?' என்பது தான்...

ஓலமிட்டு உரக்க ஒலி எழுப்புவேன் என்றார் ஒருவர். சிறுகச் சிறுக முயற்சித்து ஏறி விடுவேன் என்றார் மற்றொருவர். இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை...

கடைசியில் ஒருவர் கேட்டார்..,

'தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா...?'

'இல்லை' என்றனர் தேர்வுக் குழுவினர்...

'நான் விழுந்தது பகலிலா...? அல்லது இரவிலா...?'

'எதற்குக் கேட்கிறாய்...?'- என்றனர் தேர்வுக் குழுவினர்...

இவர் கூறியதாவது...

''பகலில் குழியில் விழ நானொன்றும் கண் பார்வையற்றவர் இல்லை. கவனக் குறைவானவரும் அல்ல...

அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் அல்ல...

அதனால்!, கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை என்றான்...

அவர் பதில் மனநிறைவு ஏற்படுத்தியது தேர்வுக் குழுவினர்க்கு. அவரது வாக்குத்திறமை அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்தது...

*ஆம் நண்பர்களே...!*

🟡 ஆளுமை என்பது ஒரு திறமை, அதுவே மிகை ஆற்றலாகும். திறமை என்பது மற்றவரை ஏமாற்றுவதோ, தன் செயலை சாதித்துக் கொள்வதோ இல்லை...!

🔴 திறமை என்பது பேச்சுத் திறமை, அறிவுக் கூர்மை, தெளிந்த சிந்தனை, நம்பிக்கை, சரியாக முடிவெடுக்கும் திறமை, முடிவெடுக்கும் திறன். எந்தத் தொழிலாக இருந்தாலும் எல்லோருக்கும் உயர்ந்த பீடம் கிடைத்து விடுவதில்லை...!!

⚫ உயரம் தொட்டவர்கள் அனைவருக்கும் அந்த இடம் தானாக வந்து சேர்வதுமில்லை.  தொடர்முயற்சி, கடினஉழைப்பு, புத்திக் கூர்மை, சூழ்நிலைக்கேற்ப செயல்படும் திறமை, இவையெல்லாம் தான் ஒருவரைப் படிப்படியாக உயர்த்தி முன்னேற்றப் பாதையில் நடைபோட வைக்கும்...!!!





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive