ஆண்டுதோறும் இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) கணினி வழியில் நடத்துகிறது. இந்த ஆண்டு சிமேட் தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்த அக்டோபரில் வெளியானது.
அதை தொடர்ந்து, இணையதள விண்ணப்ப பதிவு அக்டோபர் 17 முதல் நவம்பர் 25-ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 75 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்தனர்.இந்நிலையில், தேர்வுக் கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 25-ம் தேதி சிமேட் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறியலாம்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...