இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உதவி வேளாண் இயக்குநர் (விரிவாக்கம்), முதுநிலை அலுவலர் (நிதி) உள்பட 14 பதவிகளில் 76 காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்காணல் பதவிகள்) அறிவிக்கை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது
இதற்கான கணினி வழித்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 7 மற்றும் 8-ந் தேதி நடைபெற உள்ளது. தகுதியுள்ள தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் வரும் ஜனவரி 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கு்மபோது தேர்வு கட்டணத்தை யுபிஐ வசதி வாயிலாக செலுத்தலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி அறிவிக்கையின்படி முக்கிய பதவிகளில் காலியியிடங்கள் விவரம்:
கணக்கு அலுவலர் (கிரேடு-3) - 8
உதவி வேளாண் இயக்குநர் - 26
உதவி மேலாளர் (கணக்கு) - 9
உதவி மேலாளர் (சட்டம்) - 3
முதுநிலை அலுவலர் (நிதி) - 21
கட்டாய தமிழ் தாள் தேர்வு: கணினி வழித் தேர்வில், கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள், பொது அறிவு தாள் மற்றும் சம்பந்தப்பட்ட பாடத்தாள் ஆகிய 3 தாள்கள் இடம்பெறும். தமிழ்த் தேர்வில் 40 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றால் போதும். தமிழ் தாள் மதிப்பெண் தரவரிசை பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
அதேநேரத்தில் தமிழ்த் தாளில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுக்காவிட்டால் தேர்வரின் பாடத்தேர்வு மற்றும் பொது அறிவு தேர்வு மதிப்பீடு செய்யப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...