அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு 24-12-2025 ( புதன் கிழமை ) முதல் 4-01-2026 ( ஞாயிற்று கிழமை ) வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 5-01-2026 திங்கட் கிழமை அன்று முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் . அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி தலைமையாசியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல் , ஆறு , ஏரி , குளம் மற்றும் குட்டைபோன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம் . மாணவர்களின் வளர்ச்சிக்கு சமர்ச்சீரான உணவு அளிப்பது அவசியம் . இசை , நடனம் மற்றும் ஒவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும் . தாத்தா பாட்டி உள்ள வீடுகளில் சேர்ந்து உணவு அருந்த ஊக்குவிக்கவும் . மேலும் பெரியோர்களை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்குங்கள் . அனைத்து பள்ளி தலைமையாசிரிகளும் மேற்கண்ட அறிவுரைகளை மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
மீண்டும் ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
விடுமுறை தினங்களில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்த கூடாது.
- பள்ளிக் கல்வி இயக்குநர்







Nice 👍
ReplyDeleteTelugu
ReplyDelete