இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து உதவியாளர் ஆக பதவி உயர்வு முன்னுரிமை எண் 146 முதல் 399 முடிய உள்ளவர்களுக்கு 15-12-2025 திங்கள்கிழமை நடைபெற இருந்த கலந்தாய்வு ரத்து செய்யப்படுகிறது - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 12-12-2025பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் /தட்டச்சர்களுக்கு தமிழ்நாடு அமைச்சுப்பணி சிறப்பு விதிகள், விதி 5(b) La உதவியாளர் பதவி உயர்வு மற்றும் விதி 9 ன் படி சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை-11 லிருந்து உதவியாளர்களாகப் பணி மாறுதல் வழங்கும் பொருட்டு 15.03.2025 நிலவரப்படி பட்டியலில் முன்னுரிமை எண்.147 முதல் 399 வரையிலான நபர்களின் கூடுதல் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் (Drawt of Additional Panel to the post of Assistant) un(1) 06.12.2025 இவ்வியக்க செயல்முறைகளின் வாயிலாக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 08.12.2025 நாளிட்ட இவ்வியக்க செயல்முறைகளின் வாயிலாக வெளியிடப்பட்ட தேர்ந்தோர் பெயர் பட்டியலில் முன்னுரிமை எண் எண்.146 முதல் 399 வரையிலான பணியாளர்களுக்கு 15.12.2025 அன்று காலை 11.00க்கு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வு Google Meet மூலம் நடத்தப்பட உள்ளது. என பார்வை(1)ல் காணும் 11.12.2025 நாளிட்ட செயல்முறைகள் மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நிருவாக காரணங்களினால் மேற்குறிப்பிட்ட நாளில் நடைபெறவிருந்த இளநிலை உதவியாளர்/தட்டச்சர்/ சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை-III பதவியிலிருந்து உதவியாளராகப் பதவிஉயர்வு/பணிமாறுதல் கலந்தாய்வு இரத்து செய்யப்படுகிறது என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.









0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...