மருத்துவக் குழு (Medical board)
நீண்ட நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்த ஆசிரியருக்கு மருத்துவக் குழுவிற்கு யார் விண்ணப்பக் கருத்துருக்களை அனுப்புவது ?
மருத்துவக் குழு (Medical board) என்பது ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும், மருத்துவர்கள் கொண்ட குழுவாகும்.
இக்குழு ஒவ்வொரு வாரத்திலும், ஒரு கிழமையில் கூடி மருத்துவ விடுப்பு, மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கு ID க்கு சான்றிதழ் (Certificate) வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்வர்.
மருத்துவக் குழுவிற்கு (Medical board) பரிந்துரை செய்யும் நபர்கள் :-
தொடக்கக்கல்வித் துறை என்றால் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு மருத்துவ குழுவிற்கு அனுப்பும் அதிகாரம் படைத்தவர் (Leave Authority) - வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) ஆவார்.
உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு மருத்துவக் குழுவிற்கு அனுப்பும் அதிகாரம் படைத்தவர் பள்ளித் தலைமையாசிரியர் அனுப்புவார்.
இவர்களுடைய பரிந்துரையின் பேரில் மருத்துவ குழுவில் (Medical board-) இல் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மருத்துவக் குழு அதிகாரியின் முன்னிலையில் நேரில் வருகை புரிந்து தனது நோயின் தன்மையை ஆதாத்துடன் விளக்கி சான்றிதழ் பெற்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் வட்டாரக் கல்வி அலுவலரிடமும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடமோ அல்லது (Leave Authority) - யிடம் ஒப்படைக்க வேண்டும்.
அறுபது நாள்களுக்கு மேல் தொடர்ச்சியாக மருத்துவ விடுப்பு எனில் அல்லது பகுதி பகுதியாக 60 நாள்களுக்கு மேல் மருத்துவ விடுப்பு எனில் அல்லது பணியிட மாற்றத்தைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எனில் விண்ணப்பம் கிடைக்கப் பெற்ற மூன்று நாள்களுக்குள் மருத்துவக் குழுவிற்கு (Medical Board) அனுப்புதல் வேண்டும்.
விடுப்பு முடிந்து, உரிய படிவத்தில் மருத்துவரிடம் பெறப்பட்ட தகுதிச் சான்றின் அடிப்படையில் தான் பணியில் சேருதல் வேண்டும்.
மருத்துவக் குழுவிற்குப் (Medical Board) பரிந்துரைக்கப்பட்டுச் செல்லாமல் இருத்தல் அல்லது பணியில் சேரத் தகுதிச் சான்று பெற்றுப் பணியில் சேராமல் இருத்தல் போன்ற நிகழ்வில் மருத்துவ விடுப்பு வழங்கக் கூடாது. பிற தகுதியான விடுப்பு தான் வழங்குதல் வேண்டும்.
Tamil Nadu Leave Rules, 1933-Rule-15- Grant of Unearned Leave on Medical Certificates (Medical Leave) - Consolidated Instructions- Issued.
G.O Ms No. 8 P&A.R (FRIII) Dt. 19.01.2015
59 நாள்கள் வரை விடுப்பு தொடர்ச்சியாக எடுக்கலாம் 60 நாள்களுக்கு மிகும்போது தான் கட்டாயம் மருத்துவக் குழுவிற்குப் பரிந்துரை செய்தல் வேண்டும்.
FR 74 - Ruling 9 A (VII) அரசு மருத்துவமனைகள் / அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் உள்நோயாளியாக 60 நாள்களுக்கு மேல் தங்கியிருந்து சிகிச்சை பெற்றால், மருத்துவக் குழுவிற்கு அனுப்பிடத் தேவையில்லை.
காச நோய், தொழு நோய், புற்று நோய் மருத்துவ விடுப்பிற்கு மருத்துவ குழுவிற்கு அனுப்பிடத் தேவையில்லை. மருத்துவ சான்று அளித்தால் போதுமானது.
மருத்துவக் குழுவிற்குப் பரிந்துரை செய்யும், நிகழ்வில் பணியாளர் விடுப்பு விண்ணப்பத்தில் எந்த முகவரி கொடுத்துள்ளாரோ அந்த முகவரிக்கு அருகில் உள்ள மருத்துவக் குழுவிற்குத் தான் பரிந்துரை செய்தல், பணியாளர் அலுவலகத் தலைமையிடத்திற்கு அருகில் உள்ள மருத்துவக் குழுவிற்குப் பரிந்துரை செய்யக்கூடாது.
மருத்துவக் குழுவிற்குப் பரிந்துரை செய்யும் நிகழ்வில் பணியாளர் மருத்துவ அவசர ஊர்தியில் (Ambulance) பயணித்து மருத்துவக் குழுவின் முன் ஆஜரானால் ஊர்திச் (Ambulance) செலவினை அரசு ஏற்றுக்கொள்ளும்.
Medical Board G.O.Ms.No. 8 - Dated 19-01-2015 - PDF Download Here








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...