அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு டிச. 27-ம் தேதி (காலை மற்றும் பிற்பகல்) நடைபெற உள்ளது. இதற்காக 38 மாவட்டங்களிலும் 195 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஹால்டிக்கெட் வெளியீடு: தேர்வுக்கான நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்யும்போது ஏதேனும் இடர்பாடு அல்லது சந்தேகம் எழுந்தால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைதீர்ப்பு மையத்தை தொடர்புகொள்ளலாம். தேர்வு மையம் மாற்றம் தொடர்பான கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...