Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

WhatsApp / Telegram - நடைமுறைக்கு வரும் புதிய விதி & பரப்பப்படும் வதந்திகள்

 
WhatsApp / Telegram பயன்பாட்டில் SIM-இணைப்பு மற்றும் 6-மணி நேரத்திற்கு ஒருமுறை லாக்அவுட் - நடைமுறைக்கு வரும் புதிய விதி & பரப்பப்படும் வதந்திகள்

அனைவருக்கும் வணக்கம். நேற்று முதல் இந்த பதிவு சமூக ஊடகங்களில் உலா வருகிறது. பயமுறுத்துகிறது. அது குறித்த சில விளக்கங்கள்...

உண்மையானவை / அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை:

அரசு புதிய விதிகளின் மூலம் WhatsApp, Telegram போன்ற மெசேஜிங் ஆப்கள் அதே SIM-க்கு கட்டாயமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். SIM இல்லாமல் வேலை செய்யக்கூடாது.

WhatsApp Web / Telegram Web போன்ற டெஸ்க்டாப் பயன்பாடுகள் 6 மணி நேரத்திற்கொரு முறை தானாக லாக்அவுட் ஆக வேண்டும்.

இதன் நோக்கம் மோசடி, போலி SIM, ஆபத்தான கணக்குகளைத் தடுப்பது.

பொய்யான தகவல்கள்

“அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படும்”, 

“அனைத்து மெசேஜ்களும் அரசு சேமிக்கும்” — இவை பொய்.

WhatsApp-இல் ✔✔✔, சிவப்பு டிக், “அரசு பார்த்தது”, “அரசு நடவடிக்கை” போன்ற டிக்-மார்க் சிஸ்டம் இருப்பதாக சொல்வது முற்றிலும் பொய்.

அரசியல்/ மத செய்தி அனுப்பினால் “உடனடி கைது” — அப்படி அதிகாரப்பூர்வ விதி இல்லை.

“உங்கள் மொபைல் சாதனங்கள் அனைத்தும் அரசு கண்காணிப்பில் இருக்கும்” — இது பரப்பப்படும் வதந்தி.

“நாளை முதல் எல்லாம் அமலாகும்” — உண்மையில் இது 90 நாட்களில் படிப்படியாக அமலாகும்.

குறிப்பாகச் சொன்னால்

WhatsApp / Telegram பயன்பாட்டில் SIM-இணைப்பு மற்றும் 6-மணி நேரத்திற்கு ஒருமுறை லாக்அவுட் மட்டுமே புதிய விதி.

மீதியுள்ள “அழைப்புகள் பதிவு”, “எந்த அரசியல் மெசேஜ் அனுப்பினாலும் கைது”, “மூன்று டிக்/ அரசு பார்த்தது” போன்றவை எல்லாம் பயமுறுத்தும் போலி செய்திகள்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive