மார்ச் மற்றும் ஏப்ரல்
மாதங்களில் நடைபெற உள்ள 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு
விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு
அளிக்கப்பட்டுள்ளது.
1. சிறப்பு தட்கல் (Tatkal) முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
2. விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்: வரும் 10 மற்றும் 11-ம் தேதிகள்.
3. விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
4. கட்டண விவரம்: தேர்வு கட்டணத்துடன் சேர்த்து, மேனிலைப் பள்ளிக்கு ரூ.1000-ம், பத்தாம் வகுப்புக்கு ரூ.500-ம் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
5. தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
6. இந்த விவரங்கள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...