Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரூ. 10 லட்சத்துக்கு உட்பட்ட வங்கி பரிமாற்றத்திற்கு PAN Card Number குறிப்பிட தேவை இல்லை

 

ரூ. 10 லட்சத்துக்கு உட்பட்ட வங்கி பரிமாற்றத்திற்கு PAN Card Number குறிப்பிட தேவை இல்லை
ரூ.5 லட்சம் இருசக்கர வாகனம் வாங்க 'பான்' எண் கட்டாயம்
ரூ.10 லட்சத்துக்கு உட்பட்ட வங்கி பரிமாற்றத்துக்கு ‘பான்’ எண் குறிப்பிட தேவையில்லை

வரைவு வருமானவரி விதிமுறைகளில் தகவல்
புதுடெல்லி, பிப்.10-ரூ.10 லட்சத்துக்கு உட் பட்டவங்கி பணபரிமாற்றத்துக்கு 'பான்' எண் குறிப்பிட தேவை யில்லை. ரூ.5 லட்சத் துக்கு மேல் விலை கொண்ட இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கும் 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயம் என்று வரைவு வருமான வரி விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1-ந் தேதி அமல்
 
தற்போது நடைமுறையில் உள்ள வருமானவரி  சட்டம் 1961-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதை தற்காலத்துக்கு ஏற்ப எளிமைப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு புதிய வருமானவரி மசோதா-2025 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு வருமானவரி விதிமுறைகளை பொதுமக்கள் கருத்துகேட்புக்காக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் கருத்துகளை பரிசீலித்த பிறகு மார்ச் மாத முதல் வாரத்தில் இறுதியான வருமானவரி விதிமுறைகளை வெளியிட திட்டமிட்டுள்ளது.

அதன்பிறகு புதிய வருமான வரி சட்டம்-2025, ஏப்ரல் 1-ந் வரி தேதி அமலுக்கு வரும்.

ரூ.10 லட்சம்
 
‘இந்நிலையில், வரைவு வருமானவரி விதிமுறைகளில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தற்போது, ஒரே நாளில் வங்கிக்கணக்கில் ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக செலுத்துவதற்கோ, எடுப்பதற்கோ 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயமாக உள்ளது. வரைவுவிதிமுறைகளில் அந்த உச்சவரம்பு உயர்த்தப் பட்டுள்ளது.

அதன்படி, ஒருவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிக்கணக்குகளில் இருந்து ஒரு நிதியாண்டில் மொத்தம் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை பரி மாற்றம் செய்தால், 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆகும். ரூ.10 லட்சத்துக்கு உட்பட்ட தொகை பரிமாற்றத்துக்கு 'பான்' எண் குறிப்பிட
தேவையில்லை. 
 
கார், இருசக்கர வாகனம்
 
தற்போது, எந்த தொகைக்கு கார் வாங்கினாலும் 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயமாக உள்ளது. இருசக்கர வாகனம் வாங்க குறிப்பிட தேவையில்லை. வரைவு விதிமுறைகளின்படி, ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புக்கு காரோ அல்லது இருசக்கர வாகனங்களோ வாங்கினால் 'பான்' எண் குறிப்பிட வேண்டும்.

ஓட்டல் பில்தொகை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால், 'பான்' எண் குறிப்பிட வேண்டி இருந்தது. இது ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அசையா சொத்துகள்
 அசையா சொத்துகள் வாங்க, விற்க பரிசளிக்க ''பான்' எண் குறிப்பிடுவதற் கான தொகை ரூ.10 லட்சத் தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது, ஓராண்டில் காப்பீட்டு பிரமிய மொத்த தொகை ரூ.50 ஆயிரமாக இருந்தால் மட்டுமே 'பான்' எண் குறிப்பிடவேண்டி இருந்தது. இனிமேல் கணக்கு அடிப்படையில் காப்பீட்டு நிறுவனத்திடம் பாலிசி எடுக்க 'பான்' எண் கட்டாயம் ஆகும். 
 
வீட்டு வாடகைப்படி
 
மின்னணு பணம் செலுத்தும் முறைகளில் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கிரிப்டோ கரன்சி பரிமாற்றம் குறித்த தகவல்கள், வருமானவரித்துறைக்கு தெரிவிப்பது கட்டாயம் ஆகிறது.

வீட்டு வாடகைப்படி கோருவதற்கான கேட்டகிரி-1 பெருநகரங்கள் பட்டியலில் பெங்களூரு, புனே, ஆமதாபாத், ஐதராபாத் ஆகிய நகரங்கள் சேர்க்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive