UPI மூலம் (EPF) தொழிலாளர் வங்காள வைப்பு நிதியிலிருந்து நேரடியாக பணம் எடுக்க புதிய செயலி
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து
யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்க புதிய செல்போன் செயலி
ஏப்ரலில் அறிமுகம் ஆகிறது
யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்க புதிய செல்போன் செயலி
ஏப்ரலில் அறிமுகம் ஆகிறது
புதுடெல்லி, பிப்.10-தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுப்பதற்காக புதிய செல் போன் செயலி ஒன்றை மத்திய அரசு ஏப்ரல் மாதம் அறிமுகம், செய்ய உள் ளது.
காத்திருக்கும் சூழல்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இ.பி. எப்.ஓ. சுமார் 8 கோடி பேர் உறுப் பினர்களாக உள்ளனர்.
தற்போது இந்த உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் இருந்து வங்கி மூலம் பணத்தை எடுத்து வருகின்றனர். இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
அதன்படி யுனிவர்சல் கணக்கு எண் (யு.ஏ.என்) அல்லது உமங்க் செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. அத்துடன் ஆண்டுதோறும் சுமார் 5 கோடிக்கு அதிகமான இத்தகைய கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிலையும் அரசுக்கு உள்ளது.
யு.பி.ஐ . மூலம் பரிமாற்றம்
எனவே இந்த கால விரயம் மற்றும் அரசின் பணிச்சுமையையும் தடுக்கும் வகையில் யு.பி.ஐ. மூலம் தொழிலாளர்களே நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை மாற்றி எடுத்துக்கொள்ளும் வசதியை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த திட்டத்துக்கான பணிகளை அமைச்சகம் வேகமாக செய்து வருகிறது.
அதன்படி தொழிலாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள குறிப்பிட்ட பகுதியை அதில் வைத்து விட்டு மீதமுள்ள தொகையை யு.பி.ஐ. மூலம் எடுத்துக் கொள்ள முடியும்.
இதற்காக தற்போது புதிய செல்போன் செயலி' ஒன்றை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. இந்த செயலி வருகிற ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
ரகசிய குறியீட்டு எண்
இந்த செயலி வழியாக யு.பி.ஐ.மூலம் தொழிலாளர்கள் தங்கள் பணத்தை வங்கிக் கணக்குக்கு மாற்றிக்கொள்ள முடியும். அத்துடன் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிற சேவைகளையும் இந்த செயலி மூலம் செய்து கொள்ள முடியும்.
குறிப்பாக தங்கள் கணக்கில் இருப்பை அறிந்து கொள்ளவும், அதில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் விகிதம் ஆகிய வற்றையும் இந்த செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த பரிவர்த்தனை அனைத்தும் பாதுகாப்பாக முடிப்பதற்காக வாடிக்கையாளர்கள் தங்கள் ரகசிய யு.பி.ஐ. குறியீட்டு எண்ணை (பின்) பயன்படுத்திக்கொள்ள வழிவகையும் செய்யப்பட்டு உள்ளது.
ஒத்திகை நடக்கிறது
யு.பி.ஐ. மூலம் பணத்தை எடுத்துக்கொள்ளும் இந்த வசதியின் சேவையை மேம்படுத்துவதற்காகவும், தொழில்நுட்ப குறைபாடுகளை போக்குவதற்காகவும் தற்போது சுமார் 100 மாதிரி கணக்குகள் மூலம் ஒத்திகையை இ.பி.எப்.ஒ. நிறுவனம் நடத்தி வருகிறது.
தொழிலாளர் நலத்துறை உருவாக்கி உள்ள இந்த செயலி ஏப்ரல் மாதம் மிகுந்த ஆரவாரத்துடன் மத்திய அரசு அறிமுகம் செய்யும் என டெல்லி வட் டாரங்கள் தெரிவித்தன.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...