Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.03.2026

 

சாய்னா நேவால்


   



 






திருக்குறள்: 

அதிகாரம் 57 / CHAPTER 57 – 

வெருவந்த செய்யாமை 

குறள் 561: 

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் 
ஒத்தாங் கொறுப்பது வேந்து.            

விளக்க உரை: 

செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

பழமொழி :

Hear more,but talk less.       

அதிகமாக கேள்,குறைவாக பேசு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி : 

வெற்றியோ, தோல்வியோ எது வரினும் நம் கடமையை செய்வோம். பிறர் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம் - அண்ணல் அம்பேத்கர்

பொது அறிவு : 

01.உலகின் மிக அதிகமான எரிமலைகள்எந்த பெருங்கடலில்  உள்ளது?

பசிபிக் பெருங்கடல் 

Pacific Ocean

02.மரபியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

கிரிகோர் மெண்டல் -Gregor Mendel

English words :

Election-

The process where people vote to choose their representatives or leaders.

Candidate-

A person who contests in an election to win a position.

தமிழ் இலக்கணம்: 

முன்னாள் அமைச்சர்

முந்நாள் அமைச்சர் 

முன்னால் அமைச்சர் 

இவற்றில் எது சரி ?

எல்லாமே சரி தான். நாம் உபயோகப் படுத்தும் இடத்தைப் பொறுத்து அமையும்.

முன்னாள் அமைச்சர் என்றால் இதற்கு முன்பு அமைச்சராக இருந்தவர் என்று பொருள்

முந்நாள் அமைச்சர் என்றால் மூன்று நாட்கள் மட்டும் அமைச்சராக இருந்தவர் என்று பொருள்

முன்னால் அமைச்சர் என்றால் நமக்கு முன்னால் அமைச்சர் இருக்கிறார் என்று பொருள்.

ஆக மூன்று வார்த்தைகளும் சரியே

அறிவியல் களஞ்சியம் :

சூரிய ஒளி பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.

மார்ச் 17

சாய்னா நேவால் அவர்களின் பிறந்தநாள்


சாய்னா நேவால் (Saina Nehwal, பிறப்பு: 17 மார்ச் 1990) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகத் தரவரிசையில் முதலாவதாக உள்ளார்,[3][4] உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே.[5] 2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.[6] பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலகத் தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே. சூன் 21, 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.

நீதிக்கதை

ஆசை

மணிவண்ணனுக்கு சந்தோஷமாக இருந்தது. மதுரையிலிருந்து வந்த அவன் மாமா அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மணிவண்ணன் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது கூட கிடையாது.

இவன் வகுப்பில் படிக்கும் எம்.எல்.ஏ. மகனிடம் கூட இப்படிப் பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபள வென்றிருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டினான். மாமா இவன் மீது மிகவும் அன்பு வைத்திருந்தார்.

வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய மணிவண்ணனை உற்சாகப்படுத்த விரும்பினார் அவன் மாமா. “நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய்” என்று கேட்டார் அவன் மாமா. “நான் படித்து கலெக்டராக வருவேன்” என்றான் மணிவண்ணன்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் அப்பா “தம்பி விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயியின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும்” என்றார். மணிவண்ணனின் சந்தோஷம் மணலில் பாய்ந்த தண்ணீராய் மறைந்து போனது.

“ஒரு ஏழையின் மகன் கலெக்டராக வர ஆசைப்படுவது பேராசையா?” என்று நினைத்தான். வகுப்பில் மணிவண்ணன் உற்சாகமின்றி உட்கார்ந்திருந்தான். பாடங்களில் அவன் மனம் கவனம் செல்லவில்லை. வகுப்பு ஆசிரியர் அவனை கவனித்து விட்டார். ஆசிரியர் அவனை தனியாக அழைத்து விசாரித்தார்.

“ஒரு ஏழையின் மகன் கலெக்டராக ஆசைப்படுவது பேராசையா” என்றான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் கலகலவென்று சிரித்தார். “இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய்” என்றார்.

அன்று மாலை பள்ளியின ஆண்டு விழா நடைபெற்றது. ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் போது மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.

கூட்டத்தில் உட்கார்ந்திருந்த மணிவண்ணனிடம் வந்த ஆசிரியர், “உன் சந்தேகத்தை அவரிடமே கேள்” என்றார். முதலில் தயங்கிய மணிவண்ணன் தைரியமாக எழுந்து கலெக்டரிடம் கேட்டான். “ஒரு ஏழை விவசாயியின் மகன் கலெக்ட்டராக வர ஆசைப்படுவது பேராசையா?

“நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக் கூட வாங்க ஆசைப்படுவதில் தவறு இல்லை” என்று பளிச்சென்று கூறினார் கலெக்டர். “நானும் ஒரு சாதாரண ஏழை விவசாயியின் மகன் தான்”. “உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது” என்று பேசி முடித்தார் கலெக்டர்.

இருபது ஆண்டுகள் கழிந்தன.

அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மணிவண்ணன் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார்.

“நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலெக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது” என்று கலெக்டர் மணிவண்ணன் சொன்ன போது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

இன்றைய செய்திகள்


⭐அசாம் & புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு ஏப்ரல் 9ம்தேதி நடைபெறவுள்ளது.


⭐ எழுத்தாளர் தமிழ் செல்வன் அவர்களுக்கு சாகித்திய அகாடமி 2025- விருது அறிவிப்பு


⭐ போதுமான அளவு பெட்ரோல் எரிபொருள் கையிருப்பு உள்ளது என மத்திய  பெட்ரோலியத் துறை தகவல் 


 *விளையாட்டு செய்திகள்* 

🏀நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்திடம் தென்னாப்பிரிக்கா  வெற்றி பெற்றது.

Today's Headlines

⭐ Voting for the Assam & Puducherry Legislative Assembly elections will be held on April 9.

⭐ Writer Tamil Selvan has been announced as the recipient of the Sahitya Akademi Award 2025.

⭐ The Union Petroleum Ministry has stated that there is sufficient stock of petrol fuel available.

Sports News

🏀 The South African team, which is touring New Zealand, is playing a 5-match T20 series. In the first T20 match, South Africa defeated New Zealand.

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive