Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாடப் புத்தகத்தில் சர்ச்சை கருத்து: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்சிஇஆர்டி

hindutamil-prod%2F2026-03-11%2Fngpjsgxn%2Fdownload 
பாடப் புத்தகத்தில் நீ​தித்​துறைபற்றி சர்ச்​சைக்​குரிய கருத்து இடம்​பெற்​றது தொடர்​பாக என்​சிஇஆர்டி நேற்று நிபந்தனையற்ற மன்​னிப்பு கோரியது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சிலின் (என்சிஇஆர்​டி) புதி​தாக அச்​சிடப்​பட்ட 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்​தகத்​தில் 'நமது சமூகத்​தில் நீதித்​துறை​யின் பங்​கு' என்ற தலைப்​பிலான பாடம் இடம்​பெற்​றிருந்​தது. அதில் நீதித்துறை​யில் ஊழல் நில​வுவ​தாக​வும் வழக்​கு​கள் தேங்கியிருப்பதாக​வும் கூறப்பட்டிருந்தது. இது நீதித் ​துறை மீது அவ நம்​பிக்​கையை ஏற்படுத்​தும் என கல்​வி​யாளர்​கள் மத்​தி​யில் எதிர்ப்பு கிளம்​பியது.

இது தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்​குப் பதிவு செய்​தது. தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு இந்த வழக்கை விசா​ரித்​த​போது என்​சிஇஆர்​டிக்கு கடும் கண்​டனம் தெரி​வித்​தது. இது திட்​ட​மிடப்​பட்ட சதி என்​றும் அதிருப்தி தெரி​வித்​தது.

சர்ச்​சைக்​குரிய கருத்​துகள் தொடர்​பாக உங்​களுக்கு எதி​ராக ஏன் நடவடிக்கை எடுக்​கக்​கூ​டாது என்​ப​தற்கு விளக்​கம் அளிக்​கு​மாறு என்​சிஇஆர்டி இயக்​குநர் மற்​றும் பள்​ளிக் கல்வி செய​லா​ள​ருக்கு உத்​தர​விட்​டது. அந்​தப் பாடம் இடம்​பெற்ற புத்​தகத்தை (டிஜிட்​டல் மற்​றும் அச்​சுப் பிர​தி​களை) முடக்​க​வும் உத்​தர​விட்​டது. புத்​தகம் சென்​றடைந்த ஒவ்​வொரு பள்​ளி​யிலும் அவற்றை பறி​முதல் செய்வது அந்​தந்​தப் பள்ளி முதல்​வர் மற்​றும் என்​சிஇஆர்டி இயக்குநரின் பொறுப்​பாகும் என்​றும் தெரி​வித்​தது.

திரும்பப் பெறப்பட்டது: இந்​நிலை​யில் என்​சிஇஆர்டி நேற்று வெளியிட்​டுள்ள அறிக்​கை​யில், “என்​சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறி​வியல் புத்​தகத்​தின் 4-வது அத்​தி​யா​யத்​தில் 'நமது சமூகத்​தில் நீதித் ​துறை​யின் பங்​கு' என்ற பாடம் உள்​ளது. இதில் இடம்​பெற்றுள்ள கருத்​துகளுக்​காக என்​சிஇஆர்​டி-​யின் இயக்​குநர் மற்றும் உறுப்​பினர்​கள் நிபந்​தனையற்ற மன்​னிப்பு கோருகின்றனர். அந்த முழு புத்​தக​மும் திரும்​பப் பெறப்பட்டுள்ளது. மேலும் அந்​தப் புத்​தகம் தற்​போது புழக்​கத்​தில் இல்​லை" என்​று கூறி​யுள்​ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive