Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளி வளாகத்தில் கட்சி சார்பில் நலத்திட்டம் - தலைமை ஆசிரியைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

 கோவை மலுமிச்சம்பட்டி அருகே ஜேஜே நகர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக மாலதி என்பவர் பணியாற்றி வருகிறார்
 
இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக தமிழக வெற்றிக்கழகத்தினர் சிலர் கட்சி துண்டுகளை அணிந்தபடி, பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு எழுதுபொருட்கள் கொண்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியதாக கூறப்படுகிறது. 

மேலும் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியர் கட்சித்தலைவர் விஜயை சந்திக்க வைப்போம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக பள்ளியில் கட்சியினர் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. விதிமுறைகளை மீறி அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் கட்சி சார்ந்த செயல்பாடுகள் நடத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, ஒழுங்கு நடவடிக்கையின் ஒருபகுதியாக அந்த பள்ளி தலைமை ஆசிரியையான மாலதிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.


School%20Teacher





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive