Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு - TRB அறிவிப்பு

Tet%20coaching 
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, நீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்படவுள்ள தகுதித் தேர்விற்கு (TET) உதவும் வகையில், தேசிய ஆசிரியர் கூட்டணி சார்பில் சிறப்பு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 
ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது இந்தியாவில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒரு கட்டாயத் தகுதித் தேர்வாகும். 2009-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE Act) கீழ், பள்ளிகளில் கற்பித்தல் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
 
இந்தச் சிறப்புப் பயிற்சி வகுப்பினைப் பள்ளிக்கல்வி இயக்குநர்  கண்ணப்பன் காணொலி வாயிலாகத் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பயிற்சியின் நோக்கம் மற்றும் பாடத்திட்டங்கள் குறித்துப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வம் விரிவான விளக்கங்களை அளித்தார்.
 
இப்பயிற்சி வகுப்பு குறித்துத் தேசிய ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பயிற்சி வகுப்புகள் நாள்தோறும் மாலை 6:00 மணிக்குத் தொடங்கும் என்றும் கல்வித் துறை சார்ந்த முன்னணி வல்லுநர்கள் மற்றும் பாட நிபுணர்கள் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாட வாரியாக மொத்தம் 120 நேரலை வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
 
ஒரே நேரத்தில் சுமார் 3,000 ஆசிரியர்கள் வரை இந்தப் பயிற்சியில் பங்கேற்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் ஜூம் (Zoom) செயலி வாயிலாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்திப்  பயிற்சியில் இணையலாம். 
 
Zoom ID: 858 8074 9922
Passcode: 1234 

ஆகும்.

2026 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டெட் தேர்வு வருகின்ற 18ஆம் தேதியிலிருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஏப்ரல் 10 2026 ஆகும். விண்ணப்பதாரர் www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் மூலம் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பதாரர் தங்களுடைய பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive