Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப்-2 முதல்நிலைத் தேர்வு: அதிக எண்ணிக்கையில் அரசியல் கேள்விகள்!

hindutamil-prod%2F2026-11-01%2Fz5qr4bi9%2F145821122

 
எவ்​வித பரபரப்​பும் இன்றி, வெகு அமைதி​யாக, நேர்த்​தி​யாக குரூப்-2 முதல்​நிலைத் தேர்வை தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்வாணை​யம் சிறப்​பாக நடத்தி முடித்​துள்​ளது. வினாத்​தாளில் அச்​சுப்​பிழை, எழுத்​துப்​பிழை, கருத்​துப் பிழை அநேக​மாக அறவே இல்லை. இதற்​காக ஆணை​யம் தனி கவனம் செலுத்தி செயல்​பட்​டிருப்​பது நன்கு தெரி​கிறது. பாராட்​டுகள்.

பொது அறி​வுப் பிரிவு, பொதுத் தமிழ்ப் பிரிவு என்று இரண்​டிலும் வினாக்​கள் எளிதாகவே இருந்​தன. பெரிய அளவில் சிக்​கலோ, சவாலோ கொண்​டிராத நேரடி கேள்​வி​கள் நிரம்பி இருந்​தன. பொதுப் பாடப் பிரி​வில் ஒரு குறிப்​பிட்ட சிந்​தாந்​தம் சார்ந்த தமிழக அரசி​யல் வினாக்​கள் அதி​கம் இருந்​தன. அறி​வியல், நில​வியல், சுற்​றுச்​சூழல், கணினி தொழில்​நுட்​பம், சர்​வ​தேச நடப்​பு​கள்... இன்னும் பிற அறி​வுசார் தளங்​களில் இருந்து இந்த வினாத்​தாள் விலகி இருப்​ப​தாக ஓர் உணர்வு ஏற்​படத்​தான் செய்​கிறது.

அரசுப் பணிக்​கான போட்​டித் தேர்​வு​களில் பொது​வாக எதிர்​பார்க்​கப்​படும் ‘நடுநிலைமை’ வழு​வி​விட்​டதோ? ‘பரந்​துபட்ட அறி​வுத்​திறன்’ சரியாக சோதிக்​கப்​பட​வில்லையோ? என்ற எண்​ணம் எழுகிறது. நிச்​சயம் தவிர்க்​கப்​பட்டு இருக்​கலாம். பொதுப் பாடப் பிரி​வில், புற்​றுநோய் தீர்க்​கும் ‘ஹைட்​ரோஜெல்’ மருந்து, IUBMB என்​ஸைம், ‘டிஜிட்​டல் ஸ்கை ப்​ளாட்​பார்ம்’, ‘ஒமேகா பிளாக்’, தேசிய நுகர்​வோர் குறைதீர்வு ஆணை​யம், லோக்​பால் - லோக்​ஆயுக்தா, பொதுக் கணக்கு குழு, பஞ்​சாயத்​துகளின் அதி​காரம், இந்​தி​யாவின் பல்​வேறு பகுதி​களில் வசிக்​கும் பழங்​குடி​யினர்... அறி​வுத் தேடலில் முழு​மையாக ஈடு​பட்ட தேர்​வர்​களை மகிழ்ச்​சி​யில் ஆழ்த்​தும்.

மத்​திய, மாநில அரசுத் திட்​டங்​கள் குறிப்​பிட்ட அளவில் இடம்​பெற்​றுள்​ளன. விளை​யாட்​டுத் துறை​யில், 2025 FIDE சதுரங்​கப் போட்டி பற்​றிய ஒரு கேள்வி தவிர்த்து வேறு இல்லை என்​பது ஏமாற்​றம் தரு​கிறது.

பொருளாதா​ரம், பொது சுகாதா​ரம், வர்த்​தகம், அரசு நிர்​வாகம் உள்​ளிட்ட பல துறைகள் அநேக​மாக அறவே இடம்​பெறவில்லை. சட்​டம், நீதி - தகுந்த முக்​கியத்​து​வம் பெற்று இருக்​கிறது.

சில வினாக்​கள் வடிவ​மைக்​கப்​பட்ட விதம், அவை வலியுறுத்​தும் ‘கருத்​துரு’ வியப்பளிக்​கின்​றன. ஒரு கேள்வி இப்​படிக் கூறுகிறது: ‘மாநில அளவில் ஓர் அமைச்​சர், முதலமைச்​சரின் நம்​பிக்​கையைப் பெற்​றிருக்​கும் வரை பத​வி​யில் நீடிக்​கிறார். ஒரு அமைச்​சருடன் கருத்து வேறு​பாடு ஏற்​பட்​டால், முதல்​வர் அவரைப் பதவி வில​கும்​படி கேட்​கலாம்; அல்​லது, அவரைப் பதவி நீக்​கம் செய்​யுமாறு ஆளுநருக்கு அறி​வுறுத்​தலாம்.’ தற்​போதைய அரசி​யல் சூழலைக் கருத்​தில் கொண்டு கேட்​கப்​பட்​ட​தாய் ஒரு தோற்​றம் ஏற்​படுவதைத் தவிர்த்து இருக்​கலாம்.

மற்​றொரு கேள்வி - ‘நமது அரசி​யலமைப்பு பிரிவு​களில் எது இந்​திய அரசின் மதச்​சார்​பற்ற தன்​மையை வெளிப்​படுத்​த​வில்லை?’ இக்​கேள்வி, நமது சாசனத்​தின் பாகம் III - ‘அடிப்​படை உரிமை​கள்’ பகுதி​யில் உள்ள பிரிவு 28 (2)ஐ விமர்​சிக்​கும் வகை​யில் அமைந்​துள்​ளது. மிக உறுதி​யாய் தவிர்க்​கப்​பட்​டிருக்க வேண்​டும்.

இன்​னும் சில சர்ச்​சைக்​குரிய கேள்​வி​கள் இடம்​பெற்​றுள்​ளன. இது​குறித்து விரிவாக எழுதினால் இந்தக் கட்​டுரை திசைமாறிப் போய்​விடலாம். மீண்​டும், ‘தவிர்க்​கப்​பட்டு இருக்​கலாம்’ என்​பதே போது​மானது.

தேர்​வின் இரண்​டாம் தாள், தமிழ்​வழிக் கல்வி பயின்ற தேர்​வர்​களுக்கு மிக எளிது. ஆனாலும், தமிழ் மொழி சார்ந்த சில வினாக்​கள், இன்​னும் நல்ல தரத்​தில் அமைந்​திருக்​கலாம். பொதுத் தமிழ் பிரி​வில் உள்ள கேள்​வி​கள் பல தமிழி​ன் மாண்பை உயர்த்​து​வ​தாக இல்லை. கேள்​வி​கள் தரம் உயர்த்​தப்​பட வேண்​டும். மேலும், ‘பொது ஆங்​கிலம்’ வினாக்​களை​விட, பொதுத் தமிழ் வினாக்​கள் கடினமாக இருந்​த​தாக ஒரு சாரார் கூறு​வதையும், ‘நேரம் போதாமை’ குறையையும் தேர்​வாணை​யம் கவனத்​தில் கொண்டு செயல்​பட்​டால் நலம்!





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive