தமிழகத்தில் 3,665 காவலர்களை நியமிப்பதற்கான எழுத்து தேர்வு முடிவு நேற்று வெளியானது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஆக.21-ம் தேதி இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள், தீயணைப்பாளர்கள் என மொத்தம் 3,665 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நவ.9-ம் தேதியும், உடற்தகுதி தேர்வு கடந்த ஜன.22 முதல் பிப்.2-ம் தேதி வரையும் நடைபெற்றது. இறுதி கட்-ஆஃப் மதிப்பெண்கள் வெளியிடப்பட இருந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் இருந்து 1 செ.மீ. குறைவாக அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனால் இந்த தேர்வு நடவடிக்கை நிலுவையில் இருந்தது. இதேபோல, 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஏப்.4-ம் தேதி வெளியிடப்பட்டு, எழுத்து தேர்வு டிச.21-ம் தேதி நடைபெற்றது.
தமிழ்வழி கல்வி இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த தேர்வு முடிவும் வெளியாகவில்லை.ஒருபுறம் காவல் துறையில் 15 ஆயிரம் காலி பணியிடங்கள், மறுபுறம் தேர்வு நடைமுறைகள் முடிந்தும் பணியில் சேர முடியாமல் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் காத்திருக்கும் நிலை நீடித்தது.
எனவே, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து, தகுதியான தேர்வர்களை உடனடியாக பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக கடந்த அக்.5-ம் தேதி ‘‘தேர்வுகள் முடிந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலை, காவலர்கள், எஸ்ஐ பணி நியமனத்தில் சிக்கல் நீடிப்பு’ என்ற தலைப்பில் சிறப்பு செய்தி வெளியானது.
இந்நிலையில், முதல் கட்டமாக காவலர்களுக்கான தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதேபோல, எஸ்.ஐ. தேர்வு முடிவையும் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...