Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
3 முதுகலை பாடங்களுக்கு புதிய பட்டியல் வெளியீடு - தினமலர்
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், முதுகலை ஆசிரியர் தேர்வில்,
இயற்பியல், பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கு, மாற்றி
அமைக்கப்பட்ட புதிய சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை, டி.ஆர்.பி.,
(ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டு உள்ளது. அரசு
மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் நியமிக்கும் பணி, ஜவ்வாக
இழுத்துக் கொண்டிருக்கிறது. தமிழ் பாடத்திற்கு மட்டும் பணி நியமனம்
நடந்துள்ளது. உடற்கல்வி இயக்குனர், மைக்ரோ - பயாலஜி, புவியியல்,
விலங்கியல், பயோ - கெமிஸ்ட்ரி ஆகிய, ஐந்து பாடங்களுக்கு, சான்றிதழ்
சரிபார்ப்பு நடந்துள்ளது.
ஆசிரியர் பட்டயப் படிப்பு: இன்று முதல் விண்ணப்பம் - தினமணி
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை வியாழக்கிழமை (ஆக.7)
முதல் பெற்றுக் கொள்ளலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி
நிறுவனம் அறிவித்துள்ளது.
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட்., தேர்ச்சி பெற்ற பிறகு ஊக்க ஊதிய உயர்வு பெறலாம்
தொடக்கக்கல்வி - நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட்., தேர்ச்சி பெற்ற பிறகு ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் சார்பான உத்தரவு
சிசாட் தேர்வையே ரத்து செய்ய தொடர்ந்து போராட்டம்
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரி களை தேர்வு
செய்வதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வின், சிசாட் கேள்வித்தாளில் இடம்
பெற்றுள்ள ஆங்கில பகுதி மதிப்பெண், ஒட்டுமொத்த மதிப்பெண்ணில் சேர்க்கப்பட
மாட்டாது என, மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில், அதையும்
ஏற்றுக் கொள்ளாத தேர்வர்கள், சிசாட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என
கோரி, நேற்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடிகளை நீக்க வேண்டும்
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்களை முன்வைத்து நேர்காணல் நடைபெற்றுள்ளதால், அதற்குள் சீனியாரிட்டியையும், முன் அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் பலர். தவிர மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக தேர்வு நடத்தியதிலும் உள்ள குளறுபடிகளை நீக்கி சரியான முறையில் உரியவர்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் கிடையாது
துறையின் முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் கிடையாது-தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை/ அறிவுரை.
மதம்மாறிய கிறித்துவ ஆதிதிராவிட மாணவர்களுக்கான முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகை திட்டம்
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/மதம்மாறிய கிறித்துவ ஆதிதிராவிட மாணவர்களுக்கான முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகை திட்டம்
பாடநூல் கழகத்தின் பெயர் மாற்றம்: மசோதா தாக்கல்
பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாது, பள்ளிக் கல்வித் துறைக்கான
அனைத்துப்பொருள்களையும் மொத்தமாக கொள்முதல் செய்யும் அமைப்பாகச்செயல்படும்
வகையில், தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் பெயர்மாற்றப்பட்டுள்ளது. அதன்படி,
"தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என பெயர்
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புறக்கணிப்பு! : தமிழ் வாசிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி... ஆசிரியர்களுக்குள் "ஈகோ' பிரச்னை
திருச்செங்கோடு துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி
ஆசிரியர்களுக்கிடையே ஏற்பட்ட ஈகோ பிரச்னையால், தமிழ் வாசிப்புத்திறன்
மேம்பாட்டு பயிற்சியை, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் புறக்கணித்தனர்.
அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், நேற்று முன்தினம், திருச்செங்கோடு
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்வாசிப்புத்திறன் மேம்பாட்டு
பயிற்சி வகுப்பு நடந்தது.
TET இறுதி பட்டியல் வெளியிட்ட பின்பே, PG TRB இறுதிபட்டியல் வெளியிடப்படும்.
முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு எவ்வளவு?
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில்
வழங்கப்படும் இட ஒதுக்கீடு குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை
அதிகாரிகள் விளக்குகின்றனர்.
TRB PG: இன்னும் சில வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியானதும் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.
TRB PG :இன்னும் சில வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியானதும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பாடங்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.
கூடுதலாக 508 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: மாலை மலர்
அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட
உள்ளனர்.
TET புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு முன்பு கலந்தாய்வு -பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்
திருநெல்வேலியில் புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு முன்பு கலந்தாய்வு -பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்பாட்டம் - மேலும்
தொடர் மதிப்பீட்டு முறை : 9-ஆம்வகுப்பு ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
தொடர் மதிப்பீட்டு முறை தொடர்பாக 9-ஆம்வகுப்பு ஆசிரியர்களுக்கு சுமார் 20
ஆயிரம் கையேடுகள் வழங்கப்படவுள்ளன. கடந்த ஆண்டு 9-ஆம் வகுப்புக்கும்
தொடர்மதிப்பீட்டு முறை விரிவுபடுத்தப்பட்டது.
மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர்பதவியை நிரப்புவதற்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கால அவகாசம்
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சுந்தரவதனம்தாக்கல் செய்துள்ள
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில்கூறியிருப்பதாவது:– கோர்ட்டு அவமதிப்பு
தமிழ்நாடு மாநில மனிதஉரிமை ஆணையத்துக்கு தலைவர் பதவி பலஆண்டுகளாக
நிரப்பப்படாமல் உள்ளது.
19 சதவீத இடங்களை கூடுதலாகஒதுக்கீடு செய்யும்படி உச்சநீதிமன்றம் உத்தவு
தமிழகத்தில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் 19 சதவீத இடங்களை கூடுதலாகஒதுக்கீடு செய்யும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கீழ் கோர்ட் போல சாட்சிகள் விசாரணை நடக்கும் - மதுரை ஐகோர்ட் கிளை
கல்வியியல் கல்லூரிக்கு எதிரான அவமதிப்பு வழக்கில், கீழ் கோர்ட் போல சாட்சிகள் விசாரணை நடக்கும்' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வினா வங்கி புத்தகம் - சட்டப்பேரவையில் அமைச்சர் வீரமணி
அனைத்து
மாவட்டங்களிலும் வழங்கப்படும் வினா வங்கி புத்தகத்தை
இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சட்டப்பேரவையில் கேள்வி
எழுப்பப்பட்டது. சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது,
அதிமுக எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் (ஆண்டிபட்டி) வினா எழுப்பினார்.
மதுரையில் எட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது:
இணை இயக்குனர்
(மேல்நிலை பள்ளி) பாலமுருகன்தலைமை வகித்தார். மதுரை முதன்மை கல்வி
அலுவலர்ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலை வகித்தார்.






