டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை EMIS இணைய தளம் மூலம் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான 05.09.2026 அன்று ஆசிரியர் தின விழா கொண்டாடுதல் - சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஏதுவாக EMIS இணைய தளம் மூலம் ஆசிரியர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்திட மென்பொருள் உருவாக்குதல் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை EMIS இணைய தளம் மூலம் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல் - தொடர்பாக.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலை/ தனியார் பள்ளிகள்/ ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள்/சமூக பாதுகாப்புத்துறை / ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளினை ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில அரசு விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின விழாவில் ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) ரொக்கப் பரிசும். வெள்ளிப் பதக்கமும். பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப்படியும் வழங்கப்பட்டு வருகிறது.
பார்வையில் காணும் அரசாணையில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களை தேர்வு செய்திட கீழ்கண்டவாறு 38 வருவாய் மாவட்டத்திற்கான விருதுகள் நிர்ணயம், மாவட்ட / மாநில குழு அமைத்தல், மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள், ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளது.
👇👇👇👇
RK Award 2026 call letter - Download here








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...