தமிழக அமைச்சரவை கூட்டம் 8-ந்தேதி (நாளை) கூடுகிறது. அந்தக்கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
அரூரில் மார்ச் 10-இல் உள்ளூர் விடுமுறை
தருமபுரி மாவட்டம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் வருகிற 10-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC DEPARTMENT EXAM DECEMBER 2014-DEPUTY INSPECTORS TEST RESULT PUBLISHED
அரசு துறை தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி., வெளியீடு
கல்லூரிக்கு அட்மிஷன் போடவேண்டாமா?
அடுத்தது என்ன படிக்க வேண்டும் என்று நிறைய மாணவ மாணவிகள் முன்கூட்டியே
முடிவெடுத்து விடுவதால் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் முக்கிய
தேர்வுகளில் நூற்றுக்கு நூறு எடுப்பது தான் இன்றைய போட்டி சூழலில்
அவசியமாகிறது.
குழந்தை நலன் மற்றும் கல்வித் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி குறைப்பு.
வரும், 2015 - 16ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், குழந்தைகளுக்கான
திட்டங்களுக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில், குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு,
17 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், ’கிரை’ எனப்படும் குழந்தைகள் நல
அமைப்பு தெரிவித்துள்ளது.
திருமணத்துக்குப் பின் இனிஷியலை மாற்ற விரும்பாத 40% இளம்பெண்கள்.
இந்தியாவில் உள்ள இளம் பெண்களில் 40 சதவீதம் பேர் திருமணத்துக்குப் பிறகு
கணவரது பெயரை தங்களது இனிஷியலாக மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்று ஒரு
கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
பி.எஸ்.என்.எல் 3G இண்டர்நெட்டேட்டா கட்டணத்தை பாதியாககுறைக்கமுடிவு செய்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணங்கள் தொடர்ச்சியாக உயர்ந்து வரும் நிலையில், அரசு நிறுவனமான
பி.எஸ்.என்.எல் 3G இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை பாதியாக குறைக்க முடிவு மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணங்கள்
தொடர்ச்சியாக உயர்ந்து வரும்
நிலையில், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் 3G இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'பிளஸ் 2'பொதுத்தேர்வு துவக்கம்:போக்குவரத்து கழகத்திற்குஉத்தரவ
'பிளஸ் 2' பொதுத்தேர்வு இன்று (மார்ச் 5) துவங்குகிறது. இலவச பஸ் பாஸ்
பயன்படுத்தும் மாணவர்களை புறக்கணிக்கக்கூடாது என பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
Safety measures in exam centers
பத்திரிக்கைச் செய்தி
தருமபுரி மாவட்ட தேர்வு மையங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ள மார்ச்/ஏப்ரல் 2015 பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
பிளஸ்–2 தேர்வு இன்று தொடக்கம்: மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பள்ளிகளில் சுவரொட்டி
பிளஸ்–2 தேர்வு இன்று (வியாழக்கிழமை)
தொடங்குவதையொட்டி தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிக்கூடங்களில்
மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பெரிய அளவில்
சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. தேர்வு பணியில் 80 ஆயிரம் பேர்
ஈடுபடுகிறார்கள்.
குரூப் 2 தேர்வு மூலம் தேர்வான நேரடி நியமன உதவியாளர்கள் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை
குரூப் 2 தேர்வு
மூலம் நேரடி நியமன உதவியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டு பணிபுரிவோருக்கு
விரைவில் பதவி உயர்வு வழங்க புதிய நடைமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
12–ம் பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியானதா? மராட்டிய கல்வி வாரியம் மறுப்பு
12–ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியானதாக வந்த தகவலை மராட்டிய மாநில கல்வி வாரியம் மறுத்துள்ளது.
மீன்வள மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ராமநாதபுரம் மாவட்டஆட்சியர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாகவுள்ள
மீன்வள மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் க. நந்தகுமார்
புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வங்கி ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்
அகில
இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் தமிழ்நாடு கிளை பொதுச்செயலாளர்
சி.பி.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்வு நேரத்தில் பீதியூட்டும் எஸ்.எம்.எஸ்., அனுப்பாதீர்: அரசு, தனியார் பள்ளிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
'பொதுத்தேர்வு மற்றும் ஆண்டுத்தேர்வு
நடக்கும் நிலையில், தேவையற்ற தகவல்களை எஸ்.எம்.எஸ்., அனுப்பி, பீதியை
ஏற்படுத்தாதீர்கள்' என, தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும்,
கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏப்ரல் 28–ந்தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிட மத்திய அரசு ஊழியர்கள் முடிவு
மத்திய அரசு ‘பட்ஜெட்’டில் வருமான வரி
விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாததை கண்டித்து ஏப்ரல் 28–ந்தேதி
பாராளுமன்றத்தை முற்றுகையிட போவதாகவும், ஜூலை மாதத்தில் காலவரையற்ற வேலை
நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசு ஊழியர்கள்
தெரிவித்தனர்.
உலகக் கோப்பை முதல் கட்டம்: ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், சாதனைகள்!
CRC SPL CL விரைவில் அரசாணை வர வாய்ப்பு உள்ளது!
CRC SPL CL விரைவில் அரசாணை வர வாய்ப்பு
உள்ளது. தலைமை செயலகத்தில் சுற்றறிக்கையில் உள்ளது. CRC SPL CL குறித்து
SSTA சார்பாக ஆகஸ்ட் /2014 முதல் முறையாக இயக்குனர் அவர்களிடம் கேட்டு
பள்ளி கல்வித்துறையில் உள்ளதை போல் தொடக்கக்கல்வி துறையிலும் வேண்டுமென
கோரப்பட்டது ,கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகல்வி துறையில் இதுகுறித்து
வெளியிட்ட அரசாணைகளை சேகரித்து இயக்குனரிடம் வழங்கியது முதல் இதுநாள் வரை
தொடர்ந்து வலியுத்தப்பட்டு வருகிறது.
ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவிரம்
ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில்
மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.வரும் 2016ல் மத்திய அரசு
ஊழியர்களுக்கு புதிய சம்பள விகிதத்தை நிர்ணயிக்க, ஏழாவது ஊதியக்குழு
அறிவிக்கப்பட்டது. இதன் தலைவராக நீதிபதி அசோக்குமார் மாத்துார்,
உறுப்பினர்களாக விவேக்ரே, ரத்தின்ராய், செயலாளராக மீனாஅகர்வால்
நியமிக்கப்பட்டனர்.
நகல் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க காவல் துறையின் புகார் ரசீது அவசியம்
குடும்ப அட்டை
தொலைந்துபோனவர்கள், நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கும்போது காவல் துறையில்
புகார் அளித்ததற்கான ரசீது இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டாக்டரின் ஆலோசனைப்படி மாஸ்க் அணியலாம்: பன்றிக்காய்ச்சல் பாதித்த மாணவர்களுக்கு தனி தேர்வு மையம்
சென்னை,
காஞ்சீபுரம், கோவை, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல்
பாதிப்பு இருந்து வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கும் இந்நோய் பரவி உள்ளதால்
பள்ளிகள் தகுந்த முன்னெச்சரிச்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சளி,
இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தாலே குழந்தைகளை பள்ளிகளுக்கு
அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குரூப்–2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
சான்றிதழ்
சரிபார்க்கும் பணி 11–ந் தேதி வரை நடைபெறுகிறது. 590 பேர்
அழைக்கப்பட்டுள்ளனர். இதே போல மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான சான்றிதழ்
சரிபார்க்கும் பணியும் இன்று நடந்தது.
அரசு பொதுத்தேர்வுகள்: மாணவர்கள்-பொதுமக்கள் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை அமைப்பு
நாளை (05.03.2015) முதல் நடைபெறவுள்ள மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் மற்றும் 19.03.2015 முதல் நடைபெறவுள்ள இடைநிலைப் பொதுத் தேர்வுகள் தொடர்பாக பொதுமக்கள் / மாணவர்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.







