ஆசிரியர் உரிமைகள் மறுக்கப்படுவதும் தள்ளி போடப்படுவதும் தொடர் கதையாக உள்ளது
வழக்கமாக மே அல்லது ஜூன் மாதம் கலந்தாய்வு நடைபெறும் ஏற்கனவே தாமதமாக
தொடங்க பட்ட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இன்று 9/7/26 காலை தொடங்காமல்
நிறுத்திவிட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிப்பது எந்த
விதத்தில் சரி என்று தெரியவில்லை. இன்று காலை9/7/26 கலந்தாய்வு நடைபெறும்
இடம் செல்லும் வரை முறையான தகவல் இல்லை
பல ஆண்டுகள்
காத்திருப்பு வீணா?நாம் குடும்பம் குழந்தைகள் குறித்து திட்டமிடல் கூடாது
போல் உள்ளது மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெற்று செல்ல செய்த
முன்னேற்பாடுகள் எல்லாம் வீண்தானா?
( நம் பிள்ளைகள் பள்ளி கல்லூரி சேர்க்கை வீடு மாற்றம் ஏற்பாடுகள் பண செலவுகள் மன உளைச்சலுக்கு தீர்வு கிடைக்குமா?)
கலந்தாய்வில்
கலந்து கொள்ளும் அனைவரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வழங்க படவில்லை
ஆகஸ்ட் மாதம் 1ம்தேதி முதல் தான் கணக்கெடுப்பு பணி ஆரம்பம் ஆகிறது பின் ஏன்
இந்த கலந்தாய்வில் தேவையற்ற தாமதம்?
ஆசிரியர்கள்
ஒரு வாரத்திற்குள் புதிய பணியிடத்தில் பணியேற்றால் அங்கு கூட மக்கள் தொகை
கணக்கெடுப்பு பணி வழங்க பட்டால் மேற்கொள்ள தான் போகிறோம்.
இன்று 9/7/26கலந்தாய்வு திட்டமிட்டபடி நடத்தாமல் அரசு
தாமதம் செய்யும்போ து மாணவர்கள் நலன் பாதிக்கப்படாது போல் உள்ளது. இந்த
கலந்தாய்வு நிறுத்தம் குறித்து எந்த ஊடகமும் இதுவரை செய்தி வெளியிடவில்லை
புதிய பணியிடங்கள் காட்டப்படவில்லை
ஆட்சிகள் மாறுகின்றன காட்சிகள் மாறவில்லை
ஆசிரிய பணி அறப்பணி நமக்கு எப்போதும் தாமதம் ஏமாற்றம் புறக்கணிப்பு தான் பரிசு போல் வழங்க படுகிறது
ஆசிரிய பெருமக்களின் தாழ்மையான விண்ணப்பம்
நாளை 10/07/2026 முதல் தொடர்ந்து கலந்தாய்வு நடக்க ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்
- சுந்தரி







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...