ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள் 1 தேர்வு இன்றும் (ஜூலை 4), தாள் 2 தேர்வு நாளையும் (ஜூலை 5) நடைபெற உள்ளது.
222 மையங்களில் 61,386 தேர்வர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தாள் 1ஐ இன்று எழுதுகின்றனர்.
தமிழகம் முழுவதும் 12,001 ஆண்கள், 49,385 பெண்கள், 1,321 மாற்றுத்திறனாளிகள் தகுதி தேர்வை எழுத உள்ளனர்.
நாளை நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 தேர்வை 613 மையங்களில் 1,67,743 தேர்வர்கள் எழுதுகின்றனர்.
தாள் 2 எழுதுவோரில் 40,535 ஆண்கள், 1,27,208 பெண்கள், 3,151 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக வாரியம் தகவல்
தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வராதவர்களுக்கு பிறகு அனுமதி இல்லை என அறிவுரை.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...