Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Income Tax விழிப்புணர்வு பதிவு

  


Income Tax விழிப்புணர்வு பதிவு

அன்பார்ந்த நண்பர்களே,

வருமான வரி தாக்கல் (IT Return) செய்வதற்கு முன், உங்களிடம் உள்ள Form 16A மற்றும் Form 16B ஆகிய இரண்டிலும் மொத்த சம்பளத் தொகை (Gross Salary) ஒரே மாதிரியாக உள்ளதா என்பதை கட்டாயம் சரிபார்க்கவும்.

வரி (TDS) தொகை சரியாக இருந்தால் மட்டும் போதாது. மொத்த சம்பளத் தொகையும் சரியாகப் பதிவாகியிருக்க வேண்டும்.

சில நேரங்களில், "மொத்த சம்பளம் குறைவாக இருந்தாலும் பிரச்சினை இல்லை; ரீஃபண்ட் கிடைக்கும்" என்று கூறப்படலாம். ஆனால், மொத்த சம்பளத்தை விட குறைவாக வருமான வரி தாக்கல் செய்வது எதிர்காலத்தில் கடன் பெறுதல், வருமான வரித்துறை விசாரணை, வட்டி மற்றும் அபராதம் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, Form 16A, Form 16B மற்றும் Income Tax Return (ITR) ஆகியவற்றில் மொத்த சம்பளத் தொகை ஒன்றுக்கொன்று பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும், சம்பளம் வழங்கும் அலுவலர்களும் சம்பள விவரங்களில் உள்ள பிழைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், வருமான வரித்துறையிடமிருந்து விளக்கம் கோரும் நோட்டீஸ் வர வாய்ப்பு உள்ளது.

இது விழிப்புணர்விற்காக மட்டுமே பகிரப்படும் பதிவு.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive