தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 | தாள் 2 | கல்வி உளவியல் பாட வினாக்கள் மற்றும் விடைகள்
TNTET 2026 | Paper II | Educational Psychology Questions & Answers
05-07-2026 அன்று நடைபெற்ற பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 வினாத்தாள் விடைகள்
1. சுற்றுச்சூழல் அமைப்புகள் (Ecological Systems Theory) பொருத்துக:
(a) மீசோ அமைப்பு (Mesosystem) - (iii) நுண் அமைப்புகளுக்கு இடையேயான இணைப்புகள்
(b) எக்ஸோ அமைப்பு (Exosystem) - (iv) முறையான நிறுவன அமைப்புகள் (பெற்றோர் பணியிடம் போன்றவை)
(c) நுண் அமைப்பு (Microsystem) - (i) குழந்தையின் உடனடிச் சூழல் (குடும்பம், பள்ளி)
(d) பேரளவு அமைப்பு (Macrosystem) - (ii) கலாச்சார மதிப்புகள் மற்றும் பழக்கவழக்கங்கள்
சரியான விடை: (B) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
விளக்கம்: யூரி ப்ரோன்ஃபென்பிரென்னரின் (Urie Bronfenbrenner) சுற்றுச்சூழல் கோட்பாட்டின்படி, நுண் அமைப்பு என்பது குழந்தையின் நேரடித் தொடர்பைக் குறிக்கும். மீசோ அமைப்பு என்பது இந்த நுண் அமைப்புகளுக்கு இடையே உள்ள உறவு (உதாரணமாக, பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் உள்ள தொடர்பு). எக்ஸோ அமைப்பு என்பது குழந்தை நேரடியாக இல்லாத ஆனால் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல். பேரளவு அமைப்பு என்பது ஒட்டுமொத்த கலாச்சாரம் மற்றும் சட்டங்களைக் குறிக்கும்.
2. கவனம் (Attention) பற்றிய கூற்று மற்றும் காரணம்:
காரணம் (R): கவனம் என்பது விரும்பிய முடிவுகளை அடைவதற்காக ஒரு தலைப்பு, பொருள், நிகழ்வின் மீதான கவனக்குவிப்பு செய்தல், கவனிக்கும் செயல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
சரியான விடை: (A) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை மற்றும் (R) என்பது (A) ன் சரியான விளக்கம்.
விளக்கம்: கவனம் என்பது ஒரு பொருளின் மீது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு மனச் செயல்பாடாகும் (Process/Function). நாம் ஒரு குறிப்பிட்ட இலக்கை அல்லது முடிவை அடைய தூண்டல்களைத் தேர்ந்தெடுத்து கவனிப்பதே கவனம் என்பதால், காரணமும் கூற்றும் சரியாகப் பொருந்துகின்றன.
3. ஃபிராய்டின் உளப்பால் வளர்ச்சி நிலைகள் (Psycho-sexual stages):
சரியான வரிசை: வாய்சார்பு நிலை → குத நிலை → பாலிக் நிலை → உள்ளார்ந்த வளர்ச்சி நிலை → பிறப்புறுப்பு நிலை.
சரியான விடை: (C) (d), (e), (b), (a), (c)
விளக்கம்: சிக்மண்ட் ஃபிராய்டின் மனித ஆளுமை வளர்ச்சி கோட்பாட்டின்படி ஐந்து நிலைகள் காலவரிசைப்படி அமைகின்றன: 1. வாய்சார்பு நிலை (0-1 வயது), 2. குத நிலை (1-3 வயது), 3. பாலிக் நிலை (3-6 வயது), 4. உள்ளார்ந்த நிலை (6-12 வயது), 5. பிறப்புறுப்பு நிலை (12 வயதிற்கு மேல்).
4. முயற்சி-பிறழ்ச்சி கற்றல் கொள்கை (Trial and Error Theory):
காரணம் (R): விலங்குகள் முயற்சி- பிறழ்ச்சி வழிமுறையையே பின்பற்றுகின்றன.
சரியான விடை: (B) (A), (R) இரண்டும் சரியானவையே ஆனால் (R) என்பது (A) க்கான சரியான விளக்கம் அல்ல.
விளக்கம்: எட்வர்ட் தார்ண்டாக்கின் கொள்கைப்படி, மனிதர்களின் பல கண்டுபிடிப்புகள் தொடர் முயற்சிகள் மற்றும் தவறுகள் மூலம் திருத்தப்பட்டு உருவானவையே (A சரி). விலங்குகளும் இம்முறையையே கற்றலுக்குப் பயன்படுத்துகின்றன என்பதும் உண்மை (R சரி). ஆனால், மனித கண்டுபிடிப்புகளுக்கு விலங்குகள் இம்முறையைப் பின்பற்றுவது நேரடிக் காரணம் அல்ல என்பதால் விளக்கம் சரியாக அமையவில்லை.
5. தனிநபர் சூழல் நிலைகள் (Ecological Systems Levels):
சரியான விடை: (C) (c), (a), (d), (b)
விளக்கம்: ப்ரோன்ஃபென்பிரென்னரின் சூழல் மண்டலங்களை மையத்திலிருந்து வெளிப்புறமாக அடுக்க வேண்டும்: தனிநபர் (c) → நுண் அமைப்பு/வீடு, பள்ளி (a) → எக்ஸோ அமைப்பு/பெற்றோர் பணியிடம் (d) → பேரளவு அமைப்பு/கலாச்சாரம் (b).
6. ஹிப்போகிரட்டீஸின் உடல்திரவ ஆளுமைக் கோட்பாடு:
(a) இரத்தம் (Blood) - (iii) நேர்மறை நம்பிக்கை மிகுந்த (Sanguine)
(b) மஞ்சள் பித்தம் (Yellow bile) - (iv) முன்கோபம் கொண்ட (Choleric)
(c) கபம் (Phlegm) - (i) மனவெழுச்சி குறைந்த/அமைதியான (Phlegmatic)
(d) கரும் பித்தம் (Black bile) - (ii) மனச்சோர்வு உடைய (Melancholic)
சரியான விடை: (D) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
விளக்கம்: கிரேக்க மருத்துவ அறிஞர் ஹிப்போகிரட்டீஸ் மனித உடலின் நான்கு முக்கிய திரவங்களின் அடிப்படையில் மனித ஆளுமைகளை வகைப்படுத்தினார்.
7. குழந்தைகளின் எதிர்வினைகள் (Infant Reflexes) மற்றும் செயல்பாடுகள்:
(a) கண் சிமிட்டல் (Eye blink) - (iv) குழந்தைகளை வலுவான தூண்டுதலில் இருந்து பாதுகாக்கிறது
(b) வேரூன்றல் (Rooting) - (iii) குழந்தைகளுக்கு முலைக்காம்பு கண்டுபிடிக்க உதவுகிறது
(c) உறிஞ்சல் (Sucking) - (i) உணவளிக்க அனுமதிக்கிறது
(d) மொரோ (Moro) - (ii) குழந்தை தாயிடம் ஒட்டிக் கொள்ள உதவுகிறது
சரியான விடை: (B) (a)-(iv), (b)-(iii), (c)-(i), (d)-(ii)
விளக்கம்: பிறப்புக்கால தன்னிச்சை எதிர்வினைகள் (Reflexes) குழந்தையின் உயிர்வாழ்தலுக்கு இன்றியமையாதவை. திடீர் சத்தம் கேட்கும்போது கைகளை விரித்து மூடுவது 'மொரோ' எதிர்வினையாகும்.
8. படைப்பாற்றல் (Creativity) பொருத்துக:
(a) படைப்பாற்றலை வளர்ப்பது - (iv) அறிவுப்பகர்தல் / மூளைக் கிளர்ச்சி (Brain Storming)
(b) வாலாவின் செயல்முறை - (i) நான்கு நிலைகள் (ஆயத்தம், மறைந்திருத்தல், ஒளிர்தல், சரிபார்த்தல்)
(c) அரியெட்டிஸ் கோட்பாடு - (ii) முதன்மை மற்றும் இரண்டாம் நிலை செயல்முறை
(d) படைப்பாற்றலின் பண்புகள் - (iii) சாகச இயல்பு கொண்டது
சரியான விடை: (B) (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)
விளக்கம்: கிரஹாம் வாலாஸ் (Graham Wallas) படைப்பாற்றல் சிந்தனையை 4 நிலைகளாக விளக்கினார். அலெக்ஸ் ஆஸ்போர்ன் என்பவரால் உருவாக்கப்பட்டதுதான் பிரெய்ன் ஸ்டார்மிங் (Brain Storming) எனப்படும் மூளைக் கிளர்ச்சி முறை.
9. கற்றல் காரணிகள் பொருத்துக:
(a) கற்பவர் சார்ந்த காரணி - (iii) அடைவு ஊக்கம் (Achievement Motivation)
(b) ஆசிரியர் சார்ந்த காரணி - (iv) ஆளுமைக் கூறுகள் மற்றும் நடத்தை
(c) பாடம் சார்ந்த காரணி - (i) கற்றல் அனுபவம் (Learning Experience)
(d) செயல்பாடு சார்ந்த காரணி - (ii) கற்றல் சூழல் மற்றும் வளம்
சரியான விடை: (D) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
விளக்கம்: அடைவு ஊக்கம் என்பது மாணவரின் (கற்பவரின்) அக உந்துதலாகும். ஆசிரியரின் நடத்தை கற்பித்தலை நேரடியாகப் பாதிக்கும் ஆசிரியர் காரணியாகும்.
10. பள்ளி - சமுதாய உறவை மேம்படுத்துவது எது?
விளக்கம்: பள்ளிக்கும் அது அமைந்துள்ள சமுதாயத்திற்கும் இடையே பாலமாகச் செயல்பட்டு, மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு பெற்றோர்களையும் பொதுமக்களையும் இணைப்பது பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PTA) ஆகும்.
11. கல்வித் தொழில்நுட்பத் தேர்வின் கொள்கைகள்:
விளக்கம்: கல்வியில் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுக்கும்போது அது மாணவர்களின் வயதுக்கு ஏற்ற பொருத்தமானதாகவும் (Appropriateness), நம்பகமானதாகவும் (Authenticity), மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் (Interest) இருக்க வேண்டும். 'தகவல்' என்பது அதன் உள்ளடக்கமே தவிர அதைத் தேர்ந்தெடுக்கும் கொள்கை அல்ல.
12. நுண்ணறிவுக் கோட்பாடுகள் பொருத்துக:
(a) இருகாரணிக் கோட்பாடு - (iv) ஸ்பியர்மென் (Spearman - G & S factors)
(b) குழுக்காரணிக் கோட்பாடு - (i) L.L. தர்ஸ்டோன் (Thurstone - PMA)
(c) பல்காரணிக் கோட்பாடு - (ii) E.L. தார்ண்டைக் (Thorndike)
(d) முக்காரணிக் (Triarchic) கோட்பாடு - (iii) ஸ்டெர்ன்பெர்க் (Sternberg)
சரியான விடை: (C) (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)
விளக்கம்: சார்லஸ் ஸ்பியர்மென் பொது காரணி (G) மற்றும் சிறப்புக் காரணி (S) என்ற இரு காரணிகளை விளக்கினார். ஸ்டெர்ன்பெர்க் நுண்ணறிவின் மூன்று கூறுகளை (Triarchic Theory) முன்மொழிந்தார்.
13. பியாஜெட்டின் உணர்ச்சி இயக்க நிலையின் (Sensory Motor Stage) துணை நிலைகள்:
சரியான காலவரிசை: பிரதிபலிப்பு வடிவமைப்பு (0-1 மாதம்) → முதன்மை சுழற்சி எதிர்வினைகள் (1-4 மாதங்கள்) → இரண்டாம் சுழற்சி எதிர்வினைகள் (4-8 மாதங்கள்) → இரண்டாம் நிலை சுழற்சி எதிர்வினைகளின் ஒருங்கிணைப்பு (8-12 மாதங்கள்).
சரியான விடை: (C) (c), (b), (d), (a)
விளக்கம்: ஜீன் பியாஜெட்டின் அறிதிறன் வளர்ச்சியின் முதல் நிலையான உணர்ச்சி இயக்க நிலை மொத்தம் 6 துணை நிலைகளைக் கொண்டுள்ளது, அதில் முதல் நான்கு நிலைகள் இந்த வரிசையில் அமைகின்றன.
14. திரவ நுண்ணறிவு (Fluid Intelligence) பற்றிய கூற்றுகள்:
கூற்று II: திரவ நுண்ணறிவு வயதுக்கு ஏற்ப மெதுவாகக் குறைவது போல் தெரிகிறது. (சரி).
சரியான விடை: (D) கூற்று I தவறானது ஆனால் கூற்று II சரியானது.
விளக்கம்: திரவ நுண்ணறிவு என்பது புதிய சிக்கல்களுக்குத் தீர்வு காணும் தர்க்கரீதியான திறனாகும், இது வயது முதிர்வின் போது (முக்கியமாக முதுமையில்) குறையத் தொடங்கும். ஆனால் அனுபவத்தால் பெறப்படும் அறிவு படிகமாக்கப்பட்ட நுண்ணறிவு எனப்படும்.
15. கோல்பர்க்கின் ஒழுக்க வளர்ச்சி நிலைகள் (Kohlberg's Stages of Moral Development):
சரியான விடை: மரபுக்கு உட்பட்ட ஒழுக்க நிலை (Conventional Morality)
விளக்கம்: லாரன்ஸ் கோல்பர்க்கின் கோட்பாட்டில் மூன்று முக்கிய மட்டங்கள் (Levels) உள்ளன. அதில் இரண்டாவது மட்டமான 'மரபுக்கு உட்பட்ட மட்டத்தில்' (Conventional Level), சமூகம் மற்றும் குடும்பத்தினரின் அங்கீகாரத்தைப் பெறவும், மற்றவர்களின் பார்வையில் நல்லவராகத் தெரியவும் குழந்தை முயல்கிறது. இதுவே "நல்ல பையன் / நல்ல பெண்" நோக்குநிலை ஆகும்.
16. வைஹோட்ஸ்கியின் சமூக-கலாச்சாரக் கோட்பாடு (Vygotsky's Socio-Cultural Theory):
சரியான விடை: தனிப்பேச்சு (Private Speech)
விளக்கம்: குழந்தைகள் தங்கள் சொந்தச் செயல்களைத் திட்டமிடவும், நடத்தை மற்றும் சிந்தனையை நெறிப்படுத்தவும் தங்களுக்குள் சத்தமாகப் பேசிக்கொள்வதை வைஹோட்ஸ்கி 'தனிப்பேச்சு' (Private Speech) என்கிறார். இது பியாஜெட் கூறும் 'தன்முனைப்புப் பேச்சு' (Egocentric Speech) என்பதிலிருந்து மாறுபட்டது.
17. கற்றல் Transfer (Transfer of Learning):
சரியான விடை: எதிர்மறைக் கற்றல் மாற்றம் (Negative Transfer of Training)
விளக்கம்: முன்பு கற்ற ஒரு திறமையானது (Computer Keyboard), புதியதாக ஒரு திறனைக் கற்கும்போது (Typewriter) தடையாகவும் சுமையாகவும் அமைந்தால், அது 'எதிர்மறைக் கற்றல் மாற்றம்' எனப்படும்.
18. கவனம் சிதறல் (Distraction of Attention):
சரியான விடை: கவனச் சிதறல் (Distraction)
விளக்கம்: நாம் ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது கவனத்தைச் செலுத்தியிருக்கும்போது, நம் விருப்பமில்லாமலே மற்றொரு வெளிப்புறத் தூண்டல் நம் கவனத்தை திசைதிருப்புவது கவனச்சிதறல் எனப்படும்.
19. மறதி பற்றிய எபிங்ஹாஸின் ஆராய்ச்சி (Ebbinghaus Forgetting Curve):
சரியான விடை: மிகவும் அதிவேகமாக இருக்கும் (Very rapid in the beginning)
விளக்கம்: ஹெர்மன் எபிங்ஹாஸ் கூற்றுப்படி, நாம் ஒன்றை கற்றறிந்த முதல் 20 நிமிடங்களிலேயே 40 சதவீதத்திற்கும் அதிகமான தகவல்களும், முதல் சில மணிநேரங்களுக்குள் பெரும்பாலாலும் மறந்துவிடும். அதன் பிறகு மறதியின் வேகம் குறையும்.
20. நுண்ணறிவு ஈவு (Intelligence Quotient - IQ) கணக்கீடு:
சரியான விடை: 120
விளக்கம்: நுண்ணறிவு ஈவு கணக்கிடும் சூத்திரம்:
21. ஆளுமைச் சோதனை வகைகள் (Projective Techniques):
சரியான விடை: ரோர்சாக் மைத்தடச் சோதனை (Rorschach Inkblot Test)
விளக்கம்: நேர்காணல், வினா நிரல் போன்றவை அகவய/புறவய முறைகள். ஆனால் ரோர்சாக்கின் மைத்தடச் சோதனை (Inkblot Test) மற்றும் பொருள் அறிவோடு இணைத்தறி சோதனை (TAT) ஆகியவை ஒருவரின் அடியாழ மனதை (Unconscious Mind) ஆராயும் 'புறத்தேற்று முறைகள்' ஆகும்.
22. மேஸ்லோவின் படிநிலைக் கோட்பாடு (Maslow's Hierarchy of Needs):
சரியான விடை: தன்னிறைவுத் தேவை / தன்மதிப்புத் தேவை (Self-Actualization Needs)
விளக்கம்: மேஸ்லோவின் முக்கோணப் படிநிலையில் அடிப்படைத் தேவைகளான உடலியல் தேவைகளில் தொடங்கி, பாதுகாப்பு, அன்பு, அங்கீகாரம் ஆகியவற்றைத் தாண்டி இறுதியாக ஒரு மனிதன் தன் முழுத் திறனையும் உணரும் 'தன்னிறைவுத் தேவை' (Self-Actualization) உச்சி நிலையாக அமைகிறது.
23. மறதிக்கான காரணங்கள் (Theories of Forgetting):
சரியான விடை: பின்னோக்குத் தடை (Retroactive Interference)
விளக்கம்: இப்போது கற்ற புதிய விஷயம் பின்னோக்கிச் சென்று பழைய நினைவுகளை மறக்கடித்தால் அது 'பின்னோக்குத் தடை'. இதுவே பழைய கற்றல் முன்னோக்கி வந்து புதிய கற்றலை பாதித்தால் அது 'முன்னோக்குத் தடை' (Proactive Interference).
24. எரிக்சனின் சமூக உளவியல் வளர்ச்சி (Erikson's Psychosocial Stages):
சரியான விடை: அடையாளம் காணல் எதிர் பாத்திரக் குழப்பம் (Identity vs. Role Confusion)
விளக்கம்: 12 முதல் 18 வயது வரையுள்ள வளரிளம் பருவத்தில், "நான் யார்? என் சமூகப் பங்கு என்ன?" என்ற தங்களின் தனித்துவமான அடையாளத்தைத் தேடுவதே மாணவர்களின் முக்கிய சவாலாக இருக்கும்.
25. ஆக்கநிலிறுத்தக் கற்றல் கோட்பாடு (Classical Conditioning):
சரியான விடை: நிபந்தனைக்குட்பட்ட துலங்கள் (Conditioned Response - CR)
விளக்கம்: உணவைக் கண்டு உமிழ்நீர் சுரப்பது இயற்கை (Unconditioned). ஆனால் உணவு இல்லாமல், வெறும் செயற்கைத் தூண்டலான மணியோசைக்கு (CS) உமிழ்நீர் சுரப்பது பழகிப்போன ஒன்று என்பதால் அது 'நிபந்தனைக்குட்பட்ட துலங்கள்' ஆகும்.
26. கார்ல் ரோஜர்ஸின் மனிதநேயக் கோட்பாடு (Carl Rogers' Humanistic Theory):
சரியான விடை: சுய கருத்து (Self-Concept)
விளக்கம்: கார்ல் ரோஜர்ஸ் மனிதநேயக் கொள்கையில் 'சுய கருத்து' (Self-Concept) மிக முக்கியமானது. இது நிஜ சுயபிம்பம் (Real Self) மற்றும் இலட்சிய சுயபிம்பம் (Ideal Self) ஆகியவற்றை உள்ளடக்கியது.
27. நுண்ணிலை கற்பித்தல் (Micro-Teaching):
சரியான விடை: 36 நிமிடங்கள்
விளக்கம்: இந்தியக் கல்வி ஆராய்ச்சி மாதிரியின்படி (NCERT), நுண்ணிலை கற்பித்தல் சுழற்சி: கற்பித்தல் (6 நிமி) → பின்னூட்டம் (6 நிமி) → மறுதிட்டமிடல் (12 நிமி) → மறுகற்பித்தல் (6 நிமி) → மறுபின்னூட்டம் (6 நிமி) என மொத்தம் 36 நிமிடங்களைக் கொண்டது.
28. ப்ரூனரின் அறிதிறன் வளர்ச்சிக் கொள்கை (Bruner's Cognitive Development):
சரியான விடை: செயல்பாட்டு நிலை → படிம நிலை → குறியீட்டு நிலை (Enactive → Iconic → Symbolic)
விளக்கம்: குழந்தைகள் முதலில் செயல்கள் மூலமும் (Enactive), பின்னர் படங்கள்/வடிவங்கள் மூலமும் (Iconic), இறுதியாக மொழி மற்றும் குறியீடுகள் மூலமும் (Symbolic) உலகத்தைப் புரிந்துகொள்கிறார்கள் என்பது ப்ரூனரின் கோட்பாடு.
29. ஆளுமைப் பாதுகாப்பு நெறிமுறைகள் (Defense Mechanisms):
சரியான விடை: காரணம் கற்பித்தல் / நியாயப்படுத்துதல் (Rationalization)
விளக்கம்: தனது தோல்விக்கோ அல்லது தவறுக்கோ தர்க்கரீதியாகப் பொருத்தமற்ற ஒரு காரணத்தைக் கூறி, தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்வது 'காரணம் கற்பித்தல்' தற்காப்பு நெறிமுறை ஆகும்.
30. கற்றல் குறைபாடுகள் (Learning Disabilities):
சரியான விடை: டிஸ்லெக்ஸியா (Dyslexia)







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...