10ம் வகுப்பு தனிதேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

      பத்தாம் வகுப்பு தனித்தேர்வர், விரும்பும் பாடங்களில் மறுகூட்டல் செய்ய, ஆன்-லைன் வழியில், ஜனவரி 7,8 தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
     இதுதொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: செப்டம்பர், அக்டோபர் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு தனித்தேர்வு முடிவு, சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்வர்கள், தாங்கள் விரும்பிய பாடங்களில், மறுகூட்டல் செய்ய விரும்பினால், ஜனவரி 7 மற்றும் 8ம் தேதிகளில், ஆன்-லைன் வழியில் விண்ணப்பிக்கலாம்.

        இரு தாள் கொண்ட பாடங்களுக்கு, 305 ரூபாயும், ஒருதாள் கொண்ட பாடத்திற்கு, 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வுத்துறையின், www.dge.tn.nic.in இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விண்ணப்ப எண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு மற்றும் வங்கி படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின், அதை பூர்த்தி செய்து, ஐ.ஓ.பி., வங்கியில், "அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை-6&' என்ற பெயரில், கட்டணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Share this