NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நூலகங்களுக்கு, புத்தகங்களை விற்பனை - 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்



      "தமிழ் மற்றும் ஆங்கில புத்தக பதிப்பாளர்கள், பொது நூலக துறை கட்டுப்பட்டில் இயங்கும் நூலகங்களுக்கு, புத்தகங்களை விற்பனை செய்ய, வரும், 28ம் தேதி வரை, விண்ணப்பிக்கலாம்" என, நூலகத் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.



         இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: கடந்த, 2010 மற்றும் 11ம் ஆண்டு, தமிழ் மற்றும் ஆங்கில நூல்களின் பதிப்புகளை, பொது நூலகத் துறை வாங்குகிறது. புத்தகங்களை, பொது நூலகங்களுக்கு வழங்க, www.connemarapubliclibrarychennai.com என்ற இணையதளத்தில் உள்ள, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை, பூர்த்தி செய்து, புத்தகங்களின், மாதிரி பிரதிகளுடன், படிவம்-ஏ, படிவம்-பி ஆகியவற்றை இணைத்து, அந்தந்த மாவட்டங்களில் உள்ள பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், மாவட்ட நூலக ஆணை குழுக்களில், நேற்று, 21ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

           தற்போது, பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் வேண்டுகோளை ஏற்று, புத்தகங்களின் மாதிரி பிரதிகளை, அந்தந்த மாவட்ட நூலக ஆணை குழுக்களில் சமர்ப்பிக்க, இம்மாதம், 28ம் தேதி வரை, கால நீட்டிப்பு செய்து அறிவிக்கப்படுகிறது. பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், மேலும் தகவல்கள் தேவைப்பட்டால், 044-28524263, 044-28412087 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.
.
          இதுவரை, 15 ஆயிரம் பதிப்பாளர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பித்துள்ளனர். 2010, 11 ஆகிய இரு ஆண்டுகளுக்கும் சேர்த்து, 25 கோடி ரூபாய் அளவிற்கு, புத்தகங்கள் வாங்கப்பட உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. புத்தக தேர்வுக்குழு, புத்தகங்களின் மாதிரி பிரதிகளை ஆய்வு செய்து, தரமான புத்தகங்களை தேர்வு செய்து, பரிந்துரைக்கும். அதன் அடிப்படையில், பொது நூலகத் துறை, புத்தகங்களை வாங்கும். இரு ஆண்டுகளுக்கும் சேர்த்து, 25 கோடி ரூபாய் அளவிற்கு, தமிழக அரசு புத்தகங்கள் வாங்குவதால், பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive