NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அண்ணாமலைப் பல்கலை பல் மருத்துவ கல்லூரியில் சி.பி.ஐ., ரெய்டு


        சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக, பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர்.

           காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில் உயர் படிப்பிற்கு அனுமதி பெற்றுத் தர, பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர், முருகேசன் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணை செய்து வருகிறது.

           இந்த நிலையில், அவர் படித்த பல் மருத்துவக் கல்லூரியான, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில், ஆறு பேர் கொண்ட சி.பி.ஐ., குழுவினர், நேற்று காலை, 10:00 மணியளவில் வந்தனர். பல் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் இருந்த மொபைல் போனை பறித்து, விசாரணை மேற்கொண்டனர்.
             ஆறு பேரும், மூன்று குழுக்களாக பிரிந்து, அலுவலகம், கல்லூரியின் முக்கிய இடங்களில் உள்ள ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மாணவர்கள், ஊழியர்கள் பேராசிரியர்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்து, முதுகலை மாணவர்கள் அனைவரையும் ஒரே அறையில் வைத்து விசாரித்தனர்.
             மூன்றரை மணி நேரம் வரை விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், பின், துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் விசாரணை நடத்தினர். சி.பி.ஐ., அதிகாரிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்திய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive