Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஏடிஎம் சேவை: வங்கிகளுக்கு புதிய உத்தரவு


             ஏடிஎம் பயன்படுத்துவோரின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 


         ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை எனும் பட்சத்தில் அந்த தகவல் திரையின் வழியாக முன் கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துக்கும் குழப்பத்துக்கும் உள்ளாவது தவிர்க்கப்படும். மேலும் ஏடிஎம் மையங்களில் பிரத்யேக குறியீட்டு எண் தெளிவாக தெரியும்படி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.



             ஏடிஎம் சேவையில் குளறுபடி அல்லது சிக்கல் எதுவும் ஏற்பட்டால் அதை புகாராக தெரிவிக்க இது வசதியாக இருக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் புகார் செய்ய வசதியாக உரிய படிவங்கள் ஏடிஎம் மையங்களில் வைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர ஏடிஎம் சேவைகள் தொடர்பான புகார்களை பெறும் வங்கி அலுவலர்களின் பெயர்களும் தொலைபேசி எண்களும் மையத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதோடு வாடிக்கையாளர்கள் தொலைபேசி வழியாக புகார் தெரிவிக்க வசதியாக கட்டணமற்ற குறைதீர்ப்பு பிரிவு எண்ணும் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

             வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே ஏடிஎம்மை பயன்படுத்த அனுமதிப்பட்ட வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதன் மூலம் மோசடி நோக்கில் ஏடிஎம்மை பயன்படுத்துவது தடுக்கப்படும். மின்னணு முறை பரிமாற்ற முறை குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.





4 Comments:

  1. வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே ஏடிஎம்மை பயன்படுத்த அனுமதிப்பட்ட வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது மடத்தனமாக உள்ளது. 24X7 சேவை பாலிசி தான் வாடிக்கையாளர்களுக்கு வ்ச்தி. நுகர்வோர் நல்னுக்கு தான் ஏடிஎம் தவிர வ்ங்கி வசதிக்கு அல்ல. நிரந்தரமாக காவல்ரை நிய்மித்து முறையாக பணம் அடிக்க்டி காலியாகும் போதெல்லாம் நிரப்பி நுக்ர்வோரை திருப்தி ப்டுத்துவதுவ்தை விட்டு ஏமாற்ற நினைப்பது ரிசர்வ் வ்ங்கியின் நிர்வாக சீர்கேட்டிற்று வழி வகுக்கும்

    ReplyDelete
  2. Atm means any time money or all time money, AND how RB recommand like these rules?I

    ReplyDelete
  3. atm means automatic teller machine. ok?

    ReplyDelete
  4. It means some persons using atm for more than 15 minutes. So it should be upto a time limit for e.g 10 mins or 5 mins.It doen't mean working hours of ATM.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive