Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பென்சன் மசோதா நாளை தாக்கல் : நிறைவேறினால் போராட்டம்


              புதிய பென்சன் திட்டத்தை சட்டமாக்கும் ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011 செப்டம்பர் 2ம் தேதி திங்களன்று மக்களவையில் முதல் மசோதாவாக பட்டியலிடப்பட்டுள்ளது.

           இம்மசோதா அன்றைய தினமே நிறைவேறக்கூடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா எச்சரித்துள்ளார்.

               அன்றைய தினம் வேறு பிரச்சனைக்குரிய அலுவல்கள் இல்லாததாலும் பாஜகவும் காங்கிரசும் இதில் ஒத்த கருத்துடன் இருப்பதாலும் அன்றே நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

               இம்மசோதாவுக்கு எதிராக நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. போராடிப் பெற்ற ஓய்வூதிய உரிமையை ஒழித்துக் கட்டும் இந்த மசோதா நிறைவேறினால் மத்திய-மாநில அரசு ஊழியர்கள், 2ம் தேதியோ மறுநாளோ 2 மணி நேர வெளிநடப்பு செய்திட திட்டமிட்டுள்ளனர்.

               தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (டிஆர்இயு) அனைத்து ரயில்வே கோட்ட அலுவலகங்கள் முன்பும் 2ம் தேதியே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.ஓய்வூதியப் பறிப்புக்கு எதிராக தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட சிஐடியு தமிழ் மாநிலக் குழு திட்டமிட்டுள்ளது.




1 Comments:

  1. Why not all the State Govt. Employee can oppose the new pension bill? . An M.P or an M.L.A eligible for the pension for tendering just 5 years of service where an Govt. employee spent his valuable period 20 to 30 years of his service
    for Govt?. Why this Partial?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive