Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்!


         உலகளவில் சிறந்த 500 தொழில் நிறுவனங்களில், இந்தியாவில் 228 நிறுவனங்கள் இருக்கும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில்(R&D), புதிதாக 2 லட்சம் பணி நிலைகளை உருவாக்கும் வாய்ப்புகள் இருப்பதாக உலகளவிலான மேலாண்மை ஆலோசனை அமைப்பான சின்னோவ் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.


          இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது: R&D முதலீட்டைப் பொறுத்தவரை, சீனா 385 நிறுவனங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 228 நிறுவனங்களும், அமெரிக்காவின் விரிகுடா பகுதியில் 220 நிறுவனங்களும் உள்ளன.

           R&D துறையில் அதிக நிதி ஆதாரத்தை வைத்துள்ள நிறுவனங்கள், இந்தியாவை அத்துறைக்கான முதலீட்டிற்கு சிறந்த இடமாக கருதுகின்றன. இதனால், அடுத்த 5 ஆண்டுகளில், R&D துறையில் புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

         உலகளாவிய R&D துறை செலவினத்தில், 40% அளவிற்கு, வடஅமெரிக்காவில் தமது தலைமையகத்தைக் கொண்டிருக்கும் நிறுவனங்களையும், 34% அளவிற்கு ஐரோப்பாவை தலைமையிடமாக கொண்டிருக்கும் நிறுவனங்களையும், 18% ஜப்பானில் இயங்கும் நிறுவனங்களையும், 7% ஆசிய-பசிபிக் நாடுகளை தலைமையிடமாக கொண்டிருக்கும் நிறுவனங்களையும் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive