Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்களுக்கு நற்செய்தி!


            காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர் (Computer Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 

            1998ம் ஆண்டு எல்காட் நிறுவனத்தால் நிரப்பப்பட்ட தற்காலிக கணினி ஆசிரியர்களை தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்ய 2006ம் ஆண்டு தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது.
              அதன்பிறகு 2008, 2010 மற்றும் 2012ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட கணினி ஆசிரியருக்கான சிறப்புத்தேர்வுகளில் முறையே 894, 125 மற்றும் 15 எண்ணிகையிலான ஆசிரியர்கள் மட்டும் 50% மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து 1440 தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அவர்களில் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் கே.கே. சசிதரன் அவற்றை தள்ளுபடி செய்து, "தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது சரியே" என கூறினர். 
              மேலும் அவர்கள் கூறியதாவது: "அந்த ஆசிரியர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்டு முறைகள் வாய்ப்பு வழங்கப்பட்ட போதும், அவர்கள் தேர்ச்சி பெறவில்லை. எனவே அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது சரியே. இருந்த போதும் அவர்களின் பெயர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அவர்கள் முன்னே பெற்றிருந்த பதிவு மூப்புடன் சேர்க்கலாம். தற்போதைய அரசின் கொள்கைப்படி அவர்கள் ஆசிரியர் தேர்வு தகுதித் தேர்விலும் கலந்து கொள்ளலாம். அப்பொழுது வயது வரம்பை தளர்த்தக் கோரி அவர்கள் ஆசிரியர் தேறு வாரியத்தைக் கேட்டுக் கொள்ளலாம்." மேலும் காலியாக உள்ள அந்த 1440 கம்ப்யூட்டர் டீச்சர் பணியிடங்கள் 31-1-2014க்குள் நிரப்பப்பட வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.
            *இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் கணினி படித்தவாரக இருந்தால் நீங்கள் குறித்துக் கொள்ளவேண்டியது. நீதிபதிகள் ஆசிரியர் நியமனம் பற்றி தெளிவாக கூறவில்லை. அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு மே 2014க்கு பிறகுதான் நடத்தப்படக் கூடும். இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விலோ பெரும்பாலான கணினி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை. அடுத்த ஜனவரிக்குள் பணி நியமனம் முடிக்கப்பட வேண்டிய நிலையில் அதற்கு முன்பாக கணினி ஆசிரியர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு நடத்தப்படலாம் அல்லது பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம்.




6 Comments:

  1. Goodmorning Friends , The above news is false , fake , and cheating one. I Excplain it
    1. Only 652 Computer Teachers are Terminated . Not 1440
    2. Computer Instructor case kept alive in court . know one knows while it reach ending
    3. There is lot of confusions in the judgement so, it cant process by the Govt.
    4. B.ED Computer Teacher association wants recruitment only through the """""""""""" seniority """"""""""""""""""
    5. Some body ( B.ED Computer Teacher association) twist the news for their selfishness. They spread false news .Don't Believe that news.

    Dear friend ,computer Teacher issue is not reach the ending early as possible. Don't waste your time and money follow some """ RIOTERS """"" . Believe only authentication govt news. ****** BY UR'S WELL WISHER ****** .



    ReplyDelete
  2. Super super

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ya its true

    ReplyDelete
  5. In a Computer world new technologies arriving day by day so it is must to conduct TET exam for computer teacher selection, then only they can teach much better the subject,the students future also will be bright.

    ReplyDelete
  6. This news published before one month. So its100% fake . All computer teacher dont waste your time.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive