Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக நிதிநிலை அறிக்கை 2014-15: முக்கிய அம்சங்கள்

 
             மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
              தமிழக சட்டப்பேரவையில் 2014-2015 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:

2014-15-ம் ஆண்டில் திட்ட ஒதுக்கீடு 42,185 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியப் பலன்களுக்காக 16,021 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூ.4,000 பராமரிப்பு உதவித் தொகை அளித்திட அரசு முடிவு செய்துள்ளது. தேவைப்படும் இடங்களில், 17.50 கோடி ரூபாய் செலவில் பணிபுரியும் பெண்கள் தங்கும் 14 விடுதிகள் புதிதாக அமைக்கப்படும். திருமண உதவித் திட்டங்களுக்காக 751.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 204 கோடி ரூபாய் திருமாங்கல்யத்திற்கான தங்க நாணயங்கள் வாங்குவதற்காகவும், 547.09 கோடி ரூபாய் பண உதவிக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி அளித்திட, பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடுமையான நோய் இருப்பதாக கண்டறியப்படும் குழந்தைகளை மருத்துவமனை சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் சேவைகளை அளித்திட, மாவட்டந்தோறும் ஒரு ஆரம்ப நிலை சிகிச்சை மையம் நிறுவப்படும். அடிப்படைத் தேவைகள் திட்டத்திற்காக 186.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில நிதிக்குழு மானியத்தின் கீழ் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதிக்காக ரூ.3,734 கோடி நிதி ஒதுக்கீடு. கிராமங்களில் திடக் கழிவு மேலாண்மைக்காக, ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப் பங்கீட்டிற்காக 5,168.07 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பேருந்துப் போக்குவரத்தின் திறனை உயர்த்த, ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து தகவல் அமைப்பு முறை செயல்படுத்தப்படும். ஜவஹர்லால்நேரு தேசிய நகந்ப்புர புனரமைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் 200 கோடி ரூபாய் செலவில் பழைய பேருந்துகளை மாற்ற 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். சாலை கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கீடு ரூ.2,800 கோடி ரூபாயாக மேலும் உயர்த்தப்படும். 1,500 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்தவும், 3,500 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். கே.எப்.டபுள்யூ. என்ற ஜெர்மன் நாட்டு நிதி நிறுவனத்தின் உதவியோடு, காற்றாலை மின்சாரத்தை வெளியேற்றிடத் தேவையான பசுமை மின்சக்தி வழித்தடங்களை ரூ.1,593 கோடி மதிப்பீட்டில் அமைக்க தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் நடவடிக்கை. பாரம்பரிய நீந்நிலைகளைச் சீரமைப்பதற்காக 160 பணிகளை மேற்கொள்ள, ரூ.86.28 கோடி நிதி ஒதுக்கீடு. ஏற்கெனவே கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் 210 மருந்தகங்களுடன் கூடுதலாக 100 அம்மா மருந்தகங்கள் புதியதாகத் தொடங்கப்படும். நபார்டு மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் கீழ் உள்ள நிதியைப் பயன்படுத்தி பல்வேறு பால் பண்ணைகளின் திறனை உயர்த்த ரூ. 198.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. 1.5 லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் வழங்க ரூ. 198.25 கோடி ஒதுக்கீடு. பயிர்க் காப்பீட்டிற்காக ரூ.242.54 கோடி நிதி ஒதுக்கீடு. தேசியத் தோட்டக்கலை இயக்கம் 22 மாவட்டங்களில் ரூ115 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 323 கோடி ரூபாய் செலவில் பல்வேறு துணைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். நீலகிரி மாவட்டத்தின் சிறப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்காக, உதகமண்டலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய வருவாய்க் கோட்டம் உருவாக்கப்படும். சென்னை மாநகரத்தில் மேலும் 200 பொதுச் சேவை மையங்கள் தொடங்கப்படுவதுடன் மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேருராட்சிகளுக்கும் இத்தகைய வசதிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். கூடுதலாக, 2,000 பொதுச் சேவை மையங்கள் தனியார்-பொது பங்களிப்பு முறையில் தொடங்கப்படும். புதுவாழ்வுத் திட்டத்திற்காக ரூ.49.05 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்திற்கென ரூ.253.92 கோடி நிதி ஒதுக்கீடு. மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்வு. 12,000 பயணாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்படும். பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.105 கோடி நிதி ஒதுக்கீடு. ரூ. 2.8 கோடி செலவில் தமிழகத்தில் புதிதாக 10 கல்லூரி விடுதிகள் கட்டப்படும். சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் வரும் அக்டோபரில் நடத்தப்படும். இதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 36,233 மதிய உணவு மையங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு அல்லது நீராவி சமையல் அடுப்பு வழங்கப்படும்.
35 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்படும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.1,475.42 கோடி நிதி ஒதுக்கீடு. உழவர் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.4,200 கோடி நிதி ஒதுக்கீடு. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.716.77 கோடி நிதி ஒதுக்கீடு. சுற்றுலா கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.55.53 கோடி நிதி ஒதுக்கீடு. திருநெல்வேலி மாநகராட்சி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க ரூ. 133 கோடி நிதி ஒதுக்கீடு. விளையாட்டு வீரர் விடுதிகள், கட்டமைப்புகளுக்கு ரூ. 146.64 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் ரூ.197.10 கோடியில் 1747 குடியிருப்புகள் கட்டப்படும். சென்னை மாநகராட்சியில் புதிதாக 20 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படும். தஞ்சை, நெல்லை மாவட்டங்களில் ரூ.300 கோடி செலவில் நவீன விபத்து சிகிச்சை அமைக்கப்படும்.
வரும் நிதியாண்டில் ரூ.1110 கோடி நிதி ஒதுக்கீட்டில் 5.5 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். உயர்கல்வித் துறைக்கு ரூ.3627.93 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழகம் முழுவதும் 118 ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படும். 64 ஆரம்ப சுகாதார மையங்கள் மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். 770 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்படும். சென்னை, ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு பிரிவுக்கு ரூ.75 கோடியில் பலமாடி கட்டடம் கட்டப்படும். சென்னை, ஈரோடு, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 11 இடங்களில் வீட்டு வசதிவாரிய குடியிருப்புகள் அமைக்கப்படும். தேசிய ஊரக குடிநீர் திட்டத்திற்கு மாநில அரசின் பங்கிற்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலை மேம்படுத்த ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு. இந்திரா வீட்டுவசதி திட்டத்தில் நடப்பாண்டில் 1,6,000 வீடுகள் அமைக்கப்படும். விலையில்லா வேட்டி சேலைகள் வழங்க ரூ.499.16 கோடி நிதி ஒதுக்கீடு. நெசவாளர்களுக்கான பசுமை வீடுகளுக்கு கூடுதலாக ரூ.168 கோடி நிதி ஒதுக்கீடு.
சூரிய ஒளி மின்சக்தி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. 60 ஆயிரம் சூரிய ஒளி மின்சக்தி தெருவிளக்குகள் அமைக்க ரூ.46.58 கோடி நிதி ஒதுக்கீடு. சூரிய ஒளி மின்சக்தி கொண்ட 60,000 பசுமை வீடுகளுக்கு 1,260 கோடி ரூபாய் ஒதுக்கீடு. திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு. இளைஞர்கள் திறனை மேம்படுத்த நெல்லை, திருவள்ளூரில் மையங்கள் அமைக்கப்படும். போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியமாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு. சென்னையில் புதிய நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்பு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும். தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மான கழகத்தின் ரூ.2000 கோடி கடனை தமிழக அரசே ஏற்கும் என அறிவிப்பு. கூவம் நதியை சீரமைக்க ரூ.3,833.62 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் 5 ஆண்டுகளில் முடிக்கப்படும். திட்ட செயலாக்கத்தின்போது பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மறுகுடியமர்த்தம் செய்ய ரூ. 2.077 கோடி ஒதுக்கீடு. தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க ரூ.119.98 கோடி நிதி ஒதுக்கீடு. அணைகள் புனரமைப்புக்கு ரூ.329.65 கோடி நிதி ஒதுக்கீடு. மீனவர்களுக்கு நிவாரண நிதி: மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களின் நிவாரணத்திற்காக வழங்க ரூ.105 கோடி ஒதுக்கீடு. பூம்புகாரில் புதிய மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. வேளாண் வளர்ச்சி திட்டங்கள்: வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. திருத்திய நெல் சாகுபடி முறை 3 லட்சம் ஏக்கருக்கு விரிவுப்படுத்தப்படும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.681 கோடி செலவில் குடிநீர் தொகுப்பு அமைக்கப்படும். 4887 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும். பேரிடர் சமாளிப்புத் திட்டத்திற்கு ரூ.106.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ் வளர்ச்சிக்கு ரூ.39.29 கோடி நிதி ஒதுக்கீடு. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு ரூ.6.55 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழகம் முழுவதும் ஆதரவற்றோருக்கு 65 புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும். சென்னையில் 10 இடங்களில் நவீன வரி வசூல், கட்டண வசூல் மையம் அமைக்கப்படும். நீதிமன்ற நிர்வாக மேம்பாட்டுக்கு ரூ.783.02 கோடி ஒதுக்கீடு. தமிழக சிறைச்சாலைகளை சீரமைக்க ரூ.194.66 கோடி நிதி ஒதுக்கீடு. சாலைப் பாதுகாப்பிற்கு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு. தீயணைப்பு, மீட்புபணிகள் துறைக்கு ரூ.189.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. காவல்நிலைய கட்டிடங்கள், குடியிருப்புகள் கட்ட ரூ.571 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு: காவல் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5,168 கோடியாக அதிகரிப்பு. புகார் மனுக்களை இணையதளம் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2014-2015 ஆம் ஆண்டிற்கான தமிழக திட்ட செலவினமாக ரூ. 42,185 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் அறிவித்தார். தொடர்புடையவை மாற்றுத்திறனாளிகள் மாத உதவித் தொகை ரூ.1,500 ஆக உயர்வு தமிழக பட்ஜெட்: மாணவர்களுக்கு ரூ.1,100 கோடியில் 5.5 லட்சம் மடிக்கணினிகள் தஞ்சை, நெல்லையில் ரூ.300 கோடியில் சிறப்பு பன்நோக்கு மருத்துவமனைகள் தமிழ் வளர்ச்சிக்கு அரசு ரூ.39.29 கோடி ஒதுக்கீடு




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive