Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொதுத் தேர்வுக்கான சரியான விடைகள் தயாரிக்க 4 குழுக்கள்

            பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கு, பாட வல்லுனர் குழு, சரியான விடைகளை (கீ - ஆன்சர்) தயாரிக்கும். இந்த விடைகளின் அடிப்படையில் தான், ஆசிரியர் விடைத்தாள்களை திருத்துவர். வழக்கமாக ஒவ்வொரு பாடத்திலும் ஒரு குழு தான் "கீ - ஆன்சரை" தயாரிக்கும்.
 
             ஆனால் இந்த முறை, ஒவ்வொரு பாடத்திற்கும் 4 குழுக்களை அமைத்து, ஒவ்வொரு குழுக்களிடமும், தனித்தனியாக, "கீ - ஆன்சரை" பெற்று நான்கையும் ஒப்பிட்டு, அதில், ஒரே விடைகளைக் கொண்டவை மட்டும் தேர்வு செய்யப்படுகின்றன.

                   இதில் வேறுபாடு வந்தால், அதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து, இறுதி முடிவு எடுத்தபின், "கீ - ஆன்சர்" இறுதி செய்யப்படுகிறது. இதனால், தேர்வு முடிவிற்குப்பின் வரக்கூடிய பிரச்னைகள் குறையும் என்றும், குறிப்பாக, மறுமதிப்பீடு கோரி, அதிக மாணவர் விண்ணப்பிக்க மாட்டர்கள் என்றும் தேர்வுத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive