Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மோடியிடம் கலாம் கூறிய 3 முக்கிய அறிவுரை

           பிரதமராகப் பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு பாரதகுடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தொலைபேசியில்வாழ்த்து தெரிவித்தார். அப்போது அதனைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட மோடி, அதனைத் தாம் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். ''உங்கள் தலைமையில் இந்தியா அமைதி, வளம், வளர்ச்சியைப்பெற்று சாதனை படைக்க வாழ்த்துகிறேன்'' என்று கூறிய அப்துல் கலாம்,புதிதாக அமையவிருக்கும் பா.ஜ.க. அரசு எந்தெந்ததிட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் பட்டியலிட்டார். 
 
           10 நிமிடங்களுக்கும் மேல் நரேந்திர மோடியிடம் பேசிய அப்துல் கலாம்,மோடியிடம் 3 முக்கிய அறிவுரைகளையும் முன்வைத்தார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் செய்தியாக
வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த செய்தி: நான் மோடியிடம் இந்த நாட்டை வளர்ந்த நாடாக்க 3 முக்கியசெய்திகளை முன்வைத்தேன்.

1. இந்த நாட்டின் நகர்ப்புறம் மற்றும் 6,00,000 கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தடையற்ற தண்ணீர் வழங்கவேண்டும். இது தேசியநீர்த்தட ஒருங்கிணைப்பு மூலம் மட்டுமே சாத்தியமாகும். வறட்சிக் காலத்திலும் தண்ணீர் இருப்பை உறுதிப் படுத்த வேண்டும், அதே நேரம்,வெள்ளக் காலத்தில் தண்ணீரை சேமித்து, சரியான வகையில் விநியோகிக்கநீர் மேலாண் நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும்.

2. ஒவ்வொரு குடும்பமும் சம்பாதிக்கும் திறமையை உருவாக்க வேண்டும்.
குறிப்பாக, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மற்றும் நடுத்தர வர்க்க
குடும்பங்கள் சம்பாதிக்க வகை செய்ய வேண்டும். குறிப்பாக நாட்டின் 200
மில்லியன் குடும்பங்களில் 150 மில்லியன் குடும்பங்கள் இவ்வாறு உள்ளன.
இதற்கு 7000 புரா கூட்டுத் திட்டம் (PURA clusters) மூலம் அறிவு,
மின்னணு, உடல் உழைப்பு, பொருளாதார ஒருங்கிணைப்பு மூலம் மட்டுமே இது சாத்தியம்.

3. இந்த நாட்டின் தேவைப்படும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க 64
மில்லியன் இளையோர்க்கு சரியான வேலைவாய்ப்பு ஏற்படுத்த நாம்
உழைத்தாக வேண்டும்.

எனது இந்த மூன்று செய்திகளையும் நரேந்திர மோடி கவனத்துடன்
கேட்டு ஏற்றுக் கொண்டார். அப்போது அவர், இவற்றை நடைமுறைப்படுத்த,
நல்ல நிர்வாகத்தை அமைத்து,வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்து வைப்பதாகக் கூறினார். அதே நேரம் நமது இந்திய நாட்டின் மக்களை மேம்பட்ட பிரஜைகளாக மாற்றஉறுதி ஏற்பதாகக் கூறினார். அதாவது, வெறுமனே சம்பாதிப்பதும்அறிவு வளர்ச்சி பெறுவதுடன் மட்டுமல்லாது, நமது நாட்டின் பாரம்பரிய வலிமையை உணர்ந்த மேம்பட்ட மக்களாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளில்ஈடுபடப் போவதாகக் கூறினார்.

ஒருவரின் உள்ளத்தில் தோன்றும் இத்தகையஒளியானது, அவரது குணத்தின் அழகை உணர்த்தும். இத்தகைய நேர்மையான உறுதிப்பாடு ஒருவருக்கு, ஆன்மிக வலிமை பெற்ற தந்தையிடம் இருந்தும் தாயிடம் இருந்தும் வீட்டில் இருந்தும்தான் பெறப்படுகிறது. மேலும், துவக்கப்பள்ளி ஆசிரியரின் அறிவூட்டல் மூலமும் பெறப்படுகிறது. நான் நரேந்திர மோடி எல்லா வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன்... - என்று குறிப்பிட்டுள்ளார் அப்துல் கலாம்.




5 Comments:

  1. Siru vayathu muthal en sinthanayil iruntha ennangal MOODI G moolam niraivera arampam akindrna.nichayam nadakkum.jaihindh

    ReplyDelete
  2. MODI G" U CAN DO THAT"

    ReplyDelete
  3. நடக்க வடுவார்களா உடன் இருக்கும அரசியல் கட்சியினர் மற்றும் ஊழல் அதிகாரிகள். பல்வேறு மாநிலத்தில் சுயநல அரசியல் நடத்தும் அரசியல் தலைவர்கள் நதிநீரை இணைக்க ஒத்துழைப்பு தருவார்களா? பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் கர்நாடக அமைச்சர் ஒருவர் தமிழகத்திற்கு தண்ணீர் விடமுடியாது என்றார் சென்ற வாரம்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive