மத்திய அமைச்சருக்கு திருக்கோவிலூர் தமிழ்ச் சங்கம் நன்றி.

          வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் திருவள்ளுவர் பிறந்த நாளைக் கொண்டாட உத்தரவிடுகிறேன் என்று தெரிவித்த, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, திருக்கோவிலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
             தமிழை கௌரவிக்கும் வகையிலும் திருக்குறளின் பெருமையை இந்தியர்களும் அறிந்து கொள்ளும் வகையிலும் திருவள்ளுவர் பிறந்த நாளை அடுத்த ஆண்டு முதல் அனைத்து வடமாநில பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் தான் தென்னகத்துக்கும் வடக்குக்கும் இடையிலான பாலத்தை வலுப்படுத்தும் என்று, நாடாளுமன்றத்தில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய் வெள்ளிக்கிழமை தனது கோரிக்கையை பதிவு செய்தார். இக்கோரிக்கையைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் வட மாநிலப் பள்ளிகளில் திருவள்ளுவரின் பிறந்த நாளைக் கொண்டாட உத்தரவிடுகிறேன் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.இதையடுத்து வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் திருவள்ளுவர் பிறந்த தினம் கொண்டாடப்படும் என்று கூறிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கோரிக்கை வைத்த தருண் விஜய், தங்களையும் கோரிக்கையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற தமிழக உறுப்பினர்கள், ஆதரவுத் தெரிவித்த உறுப்பினர்களுக்கும் திருக்கோவிலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் நன்றி தெரிவித்துள்ளார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive