மீண்டும் பள்ளிக்கு வந்த ஆதிவாசி மாணவர்கள் : கல்வி அதிகாரிகள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி


           "சாலை சரியில்லை' என கூறி, பள்ளி செல்லாமல் நின்ற, கூடலூர் காபிகாடு ஆதிவாசி மாணவர்கள், மீண்டும் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர். கூடலூர் புளியாம்பாறையிலிருந்து இரண்டு கி.மீ., தொலைவில் அமைந்துள்ள காபிகாடு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த14 மாணவர்கள் புளியாம்பாறை பள்ளியில் படித்து வந்தனர்.
 
           இவர்கள் பயன்பத்தும் புளியாம்பாறை - காபிகாடு சாலை ஒரு கி.மீ., தூரம் தார் சாலையாகவும், மீதமுள்ள பகுதி மண் சாலையாக உள்ளது. மாணவர்கள் இச்சாலையில் நடந்தே பள்ளிக்கு வந்து சென்றனர். பருவ மழையின் போது, சாலை சேரும் சகதியுமாக மாறி விட்டதால், "அதில் நடந்து பள்ளிக்கு செல்ல முடியாது' என கூறி, சுமார் 14 மாணவர்கள் பள்ளி செல்வதை நிறுத்தி விட்டனர். இது பற்றி "தினமலர்' நாளிதழில் செய்தி வந்தது. இதனை தொடர்ந்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவுபடி, புளியாம்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுனில், தேவர்சோலை பேரூராட்சி கவுன்சிலர் ஸ்ரீராஜா, பி.டி.,, தலைவர் மகேந்திரன், அரசு மேல்நிலைப் பள்ளி பி.டி.., தலைவர் லோகேஷ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர், அந்த கிராமத்துக்கு சென்று மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை சந்தித்து "கவுன்சிலிங்' அளித்தனர். "மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவும், அவர்களை அழைத்து சென்று வர தனியாக ஒருவர் நியமிக்கப்படுவார்' எனவும், உறுதியளித்தனர். அதனை ஏற்று மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் சம்மதித்தனர். அதன்படி, முதல் கட்டமாக 2 மாணவியர் உட்பட 7 மாணவர்கள் தற்போது பள்ளிக்கு வந்து செல்ல துவங்கியுள்ளனர். மீதமுள்ள மாணவர்களை அழைத்து வரும் முயற்சியில் இக்குழுவினர் ஈடுப்பட்டுள்ளனர்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive