NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Cellphone Doubts: Sensors!

8.சென்சார்கள்
          ஸ்மார்ட் போன்களின் செயல்பாட்டில் சென்சார்களின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. இந்த சென்சார்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே நம் ஸமார்ட்போன்கள், நம் தேவைக்கேற்ப செயல்படவும், தன்னை சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்ளவும் முடியும்.

8.1.பிராக்ஸிமிட்டி சென்சார்
     இந்த சென்சாரானது போனிற்கு அருகில் இருக்கும் பிற போன்கள் மற்றும் மனிதர்களை அறிய பயன்படும். உங்கள் போனில் நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் பொது உங்கள் காது அல்லது முகம் திரையில்பட்டு, திரை இயக்கப்படுவதை இந்த சென்சார் தடுக்க உதவும். குறிப்பிட்ட இடைவெளியுடன் மட்டுமே நம்மால் பொருட்களை பார்க்க முடியும் (
சுமார் 25செ.மீக்கு அப்பால்). எனவே அதற்கும் குறைவான இடைவெளியில் இருந்து திரை தொடப்படும் போது, அந்த தொடுதலுக்கு போன் செயல்படாமல் தடுக்க இந்த சென்சார் பயன்படும். திரை லாக் செய்யப்படாமல் உங்கள் போன் பாக்கெட்டில் போடப்பட்டிருந்தால், அதனால் ஏற்படும் தொடுதலையும் தவிர்க்க இந்த சென்சார் உதவும்.

8.2.ஆசிலரோமீட்டர் சென்சார்
     இந்த வகை சென்சார்கள் போன்களின் நகா்வு மற்றும் இடம்பெயர்வுகளை அளக்க உதவும். புவிஈர்ப்பு மற்றும் திசைவேக மாறுபாட்டை அளக்க உதவும் இந்த சென்சார்களே நீங்கள் போனை நீளவாக்கில் திருப்பினால் திரையை நீளவாக்கிலும், செங்குத்தாக வைத்தால் திரையை செங்குத்தாகவும் மாற்றும். போட்டோக்கள் எடுக்கப்படும் போது ஓரியன்டேஷன் எனப்படும், போட்டோ எடுக்கப்பட்ட திசையை பதிவு செய்வதும் இந்த சென்சார்களே. இந்த தகவலை படித்து போட்டோவை காட்சிப்படுத்தும் கம்பியுட்டர் அல்லது டி.வி போன்ற சாதனங்கள் லேண்ட்ஸ்கேப்பில் (கிடைமட்டமாக) எடுக்கப்பட்ட போட்டோவை கிடைமட்டமாகவும், போர்ட்ரேய்ட்டில் (செங்குத்தாக வைத்து) எடுக்கப்பட்ட போட்டோக்களை திரையில் செங்குத்தாக தோன்றச் செய்வதும் இந்த சென்சாரின் தகவலைக் கொண்டேயாகும்.
 

     கேம்கள் விளையாடும் போது போனின் அசைவிற்கு ஏற்ப உங்கள் கார் அல்லது கேரக்டர்கள் நகா்வதற்கு இந்த சென்சார் அவசியம். எந்த திசையில் போன் தொடர்ந்து நகர்த்தப்படுகிறது என்பதை அறிந்த 3டி கேம்கள் இயங்கும். இவை மட்டுமின்றி பூமியில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அறிய உதவும் ஜி.பி.எஸ் எனப்படும் சென்சாருக்கு போனின் திசை மற்றும் திசைமாறும் வீதத்தினை அளந்து தகவல் அளிக்கவும் இந்த சென்சார் உதவும். (விமானம் மற்றும் பறக்கும் ஊர்திகளின் மேல் எழும்புதல் மற்றும் கீழ் விழுதல் போன்ற மாற்றங்களை அறிய பெரிதும் பயன்படுவதால் இவை ஜி-சென்சார்கள் (ஜி-கிராவிட்டி) என்றும் அழைக்பப்படும்).

8.3.கைரோஸ்கோப் சென்சார்
     இவையும் மேற்கண்ட சென்சாரினைப் போன்றே போனின் இடப்பெயர்ச்சியை அளக்கு உதவும். ஆனால் நேர்க்கோட்டு இயக்கத்திற்கு பதிலாக இவை வட்ட மற்றும் சுழற்சி இயக்கத்தினை அளக்க உதவும். உயர்தர 3டி கேம்களை விளையாடும் போது நம் வட்ட அசைவுகளை பதிவு செய்ய இவை உதவும். இதுமட்டுமின்றி உயர்தர கேமிராக்களிலும் இவ்வகை சென்சார்கள் பொருத்தப்படும். இவை நம்மால் ஏற்படும் அசைவினை அளந்து, அதற்கான எதிர் நகர்வினை உருவாக்கி, காட்சியை நிலையாக உள்ளது போன்று பதிவு செய்யும்.

8.4.பாரோமீட்டர்
     இந்த சென்சார் ஆனது நம்மை சுற்றியிருக்கும் காற்றின் அழுத்தத்தை அளக்க உதவும். விமான பயணங்கள் மற்றும் மலையேற்றத்தின் போது நாம் இருக்கும் பகுதியின் வளிமண்டல அழுத்தத்தை (அட்மாஸ்பியரிக் பிரஷர்) அறிய இவை உதவும்.

8.5.டெம்பரேச்சர் சென்சார் (ஆம்பியன்ட் டெம்பரேச்சர்)
     தெர்மோ மீட்டர் என்றும் அழைக்கப்படும் இந்த சென்சாரானது நம்மை சுற்றியிருக்கும் வளிமண்டலம் மற்றும் அறை வெப்பநிலையை அளந்து அறிய உதவும். இவற்றை டிஜிட்டல் தெர்மோமீட்டரின் செயல்பாட்டுடன் ஒப்பிடலாம்.

8.6.லைட் சென்சார்
இந்த சென்சாரானது போன் பயன்படுத்தப்படும் சூழலின் வெளிச்சத்தை அளக்கப் பயன்படும். இந்த சென்சாரின் பயன்பாட்டாலேயே உங்கள் திரையின் வெளிச்சம், சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறது. குறைந்த வெளிச்சமுடைய சூழல்களில் திரையின் வெளிச்சத்தினைக் குறைத்து பேட்டரியை சேமிக்கவும், அதிக வெளிச்ச சூழலை உணர்ந்து திரையினை அதிகபட்ச வௌச்சத்துடனும் தோன்றச் செய்ய இவ்வகை சென்சார்களே பயன்படும்.

8.7.லினியர் ஆசிலரேஷன்
அசிலரோமீட்டரை ஒத்த இந்த சென்சாரானது உங்கள் போனின் சீரான இடப்பெயர்ச்சியை (நகா்வை) அளக்க உதவும்.

8.8.ரிலேட்டிவ் யுமின்டிடி
இந்த சென்சாரானது போன் பயன்படுத்தப்படும் சூழலின் ஒப்புஈரப்பதத்தை அளக்க உதவும். எளிமையாக சொல்வதென்றால் காற்றில் கலந்துள்ள நீர் அல்லது நீராவியின் அளவினை அளக்க உதவும். இதன் மதிப்பு மழை மற்றும் குளிர்காலங்களில் அதிகமாகும், கோடை காலத்தில் மிகக் குறைவாகவும் இருக்கும்.

8.9.ஜி.பி.எஸ்
இந்த உலகத்தில் நாம் (நம் போன்) எந்த நாட்டில், எந்த பகுதியில், எந்த தெருவில் உள்ளோம் என்பதை அறிய உதவும். மிக அதிக பயன்பாடுடைய இந்த சென்சாரினைப் பற்றி விரிவாக அடுத்த பகுதியாக பார்க்கவிருக்கிறோம்.

Author: PA. Thamizh.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive