ஆன் - லைன் கல்வி சான்றிதழ் சேமிப்பு மையம்: புதிய முயற்சியில் மும்பை பல்கலைக்கழகம்

         மும்பை பல்கலைக்கழகம், மாணவர்களின் ஆன் - லைன் கல்விச் சான்றிதழ்களை பாதுகாக்கும் வகையில், தேசிய கல்விச் சான்றிதழ் சேமிப்பு மையம் (என்.ஏ.டி.,) என்ற அமைப்பை உருவாக்க திட்டமிட்டு உள்ளது.

மதிப்பெண் பட்டியல்:

இது குறித்து இப்பல்கலைக்கழக செய்தி தொடர்பாளர் லீலாதர் பன்சோடு கூறியதாவது: இந்தியாவிலேயே, முதன் முதலாக மும்பை பல்கலைக்கழகத்தில் தான் இத்தகைய திட்டம், வரும் ஆண்டில் அறிமுகமாக உள்ளது. மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு நேரில் வர அவசியமின்றி, தங்கள் கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை, இந்த ஆன் - லைன் சேமிப்பு மைய வலைதளம் மூலம் சுலபமாக பதிவிறக்கிக் கொள்ளலாம். ஆன் - லைன் வாயிலாகவே சான்றிதழ் சரிபார்ப்பும், அதிகாரபூர்வ முத்திரையும் அளிக்கப்படுவதால், போலி சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். குறிப்பாக, பணி நியமனத்தின் போது ஒருவர் அளிக்கும் கல்விச் சான்றிதழ், அசலா அல்லது போலியா என்பதை, நிறுவனங்கள் அறிந்து கொள்ளலாம்.

அடையாள சான்றிதழ்:

மாணவர்கள், தங்களின் கடவுச் சொல்லுடன், வலைதளத்தில் நுழைந்து, கல்விச் சான்றிதழ் நகல், அதற்கான சான்றொப்ப வசதி ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம். நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை, என்.ஏ.டி.,யில் மாணவர்களின் விவரங்களை அளித்து, பதிவு செய்து கொள்ளலாம். அடையாளச் சான்றுகளின் அடிப்படையில், மாணவர்கள் மற்றும் அவர்களின் கல்வி விவரங்கள், என்.ஏ.டி.,யில் பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். காகித வடிவிலான கல்விச் சான்றிதழுக்கு ஆயுள் குறைவு; அவற்றின் பாதுகாப்பும் கேள்விக்குரியது. இது போன்ற பிரச்னை ஆன் - லைன் கல்விச் சான்றிதழுக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive