NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

         முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 1,700-க்கும் அதிகமானோர் அடங்கிய தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
         1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1,90,922 பேர் எழுதினர்.
இந்தத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்டன. போட்டித் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 1:1 என்ற அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய இடங்களில் பிப்ரவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
போட்டித் தேர்வு மதிப்பெண், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மதிப்பெண், பணி அனுபவத்துக்கான மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியிருந்தால் அதிகபட்சமாக 4 மதிப்பெண்ணும், 5 ஆண்டுகளுக்கு அதிகமாக பணி அனுபவம் இருந்தால் அதிகபட்சமாக 3 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது.
இதில் உடற்கல்வி இயக்குநர் அளவிலான 27 பணியிடங்களுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை




8 Comments:

  1. Appointment eppa sir....

    ReplyDelete
  2. ஆசிரியர் தகுதி தேர்வு 2013 ம் ஆண்டு எழுதி 90 மதிபெண்ணுக்கும் அதிகம் பெற்று weightage & relaxation பாதிக்கப்பட்ட அனைவரும், நலத்துறை, கள்ளர், பள்ளிகளுக்கு பணி நியமனத்திற்கு காத்திருக்கும் அனைவரும், தயவு செய்து அடுத்த டெட் தேர்வுக்கு தயாராகவும் ஏனெனில் தமிழக அரசு யாருக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது நேற்று நடைபெற்ற ஜாக்டோ பேச்சுவார்த்தையை பார்த்தாலே தெரியுது அவர்களுக்கு எவ்வளவு அக்கறை நம்மேல் என்று........ டெட் நியூஸ் பற்றி நமக்கு ஏதும் தெரியாததால் தெரிந்த கல்வி வலைதளங்களில் உள்ள நண்பர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் பதில் தெரியவில்லை . எனவே நம் தலை விதி அவ்வளுதான் என நினைத்து மற்ற வேளைகளில் கவனம் செலுத்துங்கள். உச்ச நீதிமன்றமும் நமக்கு சாதகமா தீர்ப்பு சொன்னாலும் தமிழக அரசு அதனை செயல் படுத்துமா என்பது சந்தேகமா உள்ளது. உதாரணம் ( 2010 CV முடித்தவர்களின் தீர்ப்பு, சாலை பணியாளர்களின் தீர்ப்பு). எங்கள் வாழ்கையில் விளையாடிய அனைவரும் நன்றாக இருங்கள். ஆனால் கடவுள் என்பவர் இருந்தால் அவர் உங்களை பார்த்துக் கொள்வர்.........

    வேதனைகளுடன் பாதிக்கபட்டவன்

    ReplyDelete
  3. Sir any body tell me tet exam intha year varuma

    ReplyDelete
  4. Teachers koottani netru muthalvaridam nadathiya petchu varthai eannachu sir.tet

    ReplyDelete
  5. Tet certificate eappa kidaikum admin sir

    ReplyDelete
  6. physical education list Epps varum.

    ReplyDelete
  7. why physical.Edn list so late.

    ReplyDelete
  8. If anybody cleared the problem "@" in the TRB selection list or someone know how to solve this problem please reply

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive