பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது காட்டுமன்னார்கோவில் முருகுமாறன்
(அதிமுக) கேட்ட கேள்விகளுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்
அளித்த பதில் வருமாறு:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு ஏற்று நடத்த
வேண்டும் என்று அங்கு படிக்கும் மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும்
நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். அதற்காக பல்வேறு போராட்டங்களையும்
நடத்தினர். அதனால்தான் மாணவர்களின் நலன்கருதி அந்த பல்கலைக்கழகம்
அரசுடமையாக்கப்பட்டது.
இதேபோல், கோவையில் அறக்கட்டளை மூலம் இயங்கும் ஒரு தனியார் அரசு உதவிபெறும்
கல்லூரியையும் அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து
போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதே நிலைதான் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு
அரசு உதவி பெறும் கல்லூரியிலும் உள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில்
மாணவர்களுக்கு கல்வியில் பிரச்னை வந்தால் அந்த கல்லூரிகளை அரசு ஏற்று
நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
First make Govt colleges problem free and fill up all vacancies in Govt, Govt Aided colleges without bribe.
ReplyDelete