NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

425 ஆரம்ப பள்ளி ஆசிரியர் நியமனம்: போட்டித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

             புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள 425 ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு திங்கள் (ஜூன் 1) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
               இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை அரசுத் பள்ளி தேர்வுகள் இயக்ககத்தின் http://schooledn.puducherry.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி கல்வி இயக்குநர், பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு கல்வி வளாகம், 100 சாலை, அண்ணா நகர்,
புதுச்சேரி - 605 005 என்ற விலாசத்திற்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் பத்தாம் வகுப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ், உயர் கல்வித் தகுதிச் சான்றிதழ், ஆசிரியர் தகுதி சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 17 ஆகும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சியுடன் 2 வருட அடிப்படை ஆசிரியர் பயிற்சிக்கான பட்டைய படிப்பை டித்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 17.06.2015 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 என்ற விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.
மேலும் தேர்வு செய்யப்படும் முறைகள், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரகங்கள் அறிய http://schooledn.puducherry.gov.in/HTML/TransProm/PSTprospectus2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive