NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

என்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வு தொடங்கியது: விளையாட்டு வீரர்கள் தேர்வு

    தமிழ்நாட்டில் 539 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளது. இதில் 2 லட்சத்து 615 இடங்கள் உள்ளது. என்ஜினீயரிங் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் சேர 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களின் தரவரிசை பட்டியல் கடந்த 19–ந்தேதி வெளியிடப்பட்டது.
 
        மாணவ–மாணவிகள் விரும்புகிற கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது.
முதல் கட்டமாக விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது. இப்பிரிவில் 500 இடங்களை நிரப்ப 1000 மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

தரவரிசையில் முதல் இடம் பிடித்த மாணவன் அஸ்வின் மெக்கானிக் என்ஜினீயரிங் படிப்பில் சேர கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியை தேர்வு செய்தார். 2–வது இடம் பிடித்த ஆகாஷ் கீர்த்தி அய்யர் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் பாடப்பிரிவை தேர்வு செய்தார்.
நாளையும், நாளை மறுநாளும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
ஜூலை 1–ந்தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதில் தினமும் 6 ஆயிரம் மாணவ– மாணவிகள் அழைக்கப்படுகிறார்கள்.
கலந்தாய்வுக்கு வரும் மாணவ–மாணவிகள் வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
வெளியூர் மாணவர்களுக்கு குளிக்கும் வசதி, கழிப்பிட வசதி, மின்விசிறி வசதிகளுடன் கூடிய தற்காலிக ஓய்வு அறை வசதி, குடிநீர்வசதி ஆகியவை செய்யப்பட்டு இருந்தது.
ஏறத்தாழ ஆயிரம் பேர் இருக்க கூடிய வகையில் ராட்சத கணினி திரைகளுடன் கூடிய காட்சி கூட அறை (டிஸ்பிளே ஹாப்) கலந்தாய்வு முன் விளக்க அறை, அங்கு வரிசையாக செல்ல தடுப்புடன் கூடிய பாதை, கல்வி கடனுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கவும், ஆலோசனை வழங்கவும், வங்கிகளுக்கு தனியாக அரங்குகள் போன்ற வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.
கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழக செயலாளர் பேராசிரியர் ரெய்மண்ட் உத்தரியராஜ் பார்வையிட்டார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive