NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒதுக்கிய இடங்கள் 900 : விண்ணப்பமோ 14;2ம் ஆண்டு இன்ஜி., நிலை

         பி.எஸ்சி., முடித்து இன்ஜி., நேரடி இரண்டாம் ஆண்டில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் வெகுவாக குறைந்துள்ளது.

              டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்கள், இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கான கவுன்சிலிங், காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில், கடந்த 26-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. பி.எஸ்சி., முடித்தவர்களுக்கென ஒவ்வொரு ஆண்டும், 900 இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.


           பொதுப்பிரிவு தொடங்கும் முன்பே, பி.எஸ்சி., படித்தவர்களுக்கான கவுன்சிலிங் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு, அனைத்து பிரிவுக்கும் கவுன்சிலிங் முடிந்த பிறகு, கடைசியாக ஜூலை 9ம் தேதி நடக்கிறது.கடந்த ஆண்டு பி.எஸ்சி.,யில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்தவர்கள், மட்டுமே நேரடி இரண்டாம் ஆண்டில் சேருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. மாணவர்கள் வருகை குறைந்ததால், இந்த ஆண்டு, பிளஸ் 2-வில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து, பி.எஸ்சி.,யில் கணித பாடம் இல்லாதவர்களும், சேரலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனாலும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விண்ணப்பங்கள் மிக குறைவாகவே வந்துள்ளன.

கடந்த ஆண்டு 25க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. இந்த ஆண்டு வெறும் 14 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. வாய்ப்பு இருந்தபோதும், பி.எஸ்சி., முடித்து இன்ஜி., படிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive