NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்பு !!!

        ‘ரயில் இப்போது மாம்பலம் ஸ்டேஷனில் நிற்கிறது’ என நவீன ரயில் பெட்டிகளில் எல்.இல்.டி திரை சொல்கிறது. ஆனால் ரயிலுக்குள் இருக்கும்  பயணிகளுக்குத்தானே இது பயன்படும்? சைதாப்பேட்டை ஸ்டேஷனில் நிற்கும் ஒரு பயணிக்கு தான் ஏறவேண்டிய ரயில் இப்போது மாம்பலம் ஸ்டேஷனில்  நிற்கிறது... இன்னும் 2 நிமிடத்தில் வந்துவிடும் என்பது தெரியுமா? 
       ‘‘தெரியும்... அப்படித் தெரியவைக்க முடியும்!’’ என்கிறார்கள் விழுப்புரம் மாவட்டம் மயிலம் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த எலக்ட்ரானிக் அண்ட்  கம்யூனிகேஷன் மாணவர்கள். இவர்கள் உருவாக்கியிருக்கும் கருவியின் பெயரே ‘ரயில் லொக்கேஷன் டிடெக்டர்’

          ‘‘இன்னிக்கு எல்லாமே டிஜிட்டல் மயமாகிடுச்சு. பக்கத்துல எங்கே டீக்கடை இருக்குன்னு கூட கூகுள் மேப்ல தேடுறாங்க. ரயில் எங்கே வந்துக்கிட்டிருக்குனு  அதில் தெரியலைன்னா எப்படி?’’ என்கிறார் இறுதி ஆண்டு மாணவர் தங்கராஜ். இவரோடு இந்த ப்ராஜெக்டில் செல்வன் அருண்பிரசாத், பாலமுருகன், சதீஷ், என வகுப்புத் தோழர்கள் கை கோர்த்திருக்கிறார்கள். துணைப்பேராசிரியர் ம.ராஜபார்த்திபன் வழிகாட்டி  ஊக்குவித்திருக்கிறார்.

           ‘‘எலக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய வரவான ‘ராஸ்பெர்ரி-பை’ங்கற கருவியை இதில் பயன்படுத்தியிருக்கோம். இது செல்போன் சைஸ்ல இருக்குற ஒரு குட்டி கம்ப்யூட்டர். இதோட ஜி.பி.எஸ், ஜி.எஸ்.எம், ஜி.பி.ஆர்.எஸ் கருவிகளையும், ஒரு  பேட்டரியையும் இதுல இணைச்சிருக்கோம். ஒரு ரயில் வண்டி எங்கே இருக்குங்கற பொஸிஷனை ஜி.பி.எஸ் கருவி கண்காணிச்சு இந்த ராஸ்பெர்ரி பை  கருவிக்கு அனுப்பும். அந்தக் கருவி எப்பவும் இணையத்தோடு இணைப்பிலேயே இருக்கும். இதுக்குனு நாம இணையத்துல உருவாக்குற சர்வர்ல ஒவ்வொரு  ரயிலோட பொஸிஷனையும் அது நொடிக்கு நொடி அப்டேட் பண்ணிட்டே இருக்கும்!’’ என்கிறார் அருண்பிரசாத்.

           ‘‘இந்தக் கருவியை ஒவ்வொரு ரயில்லயும் பொருத்தணும். அதே மாதிரி ரயில் பயணிகள் இதுக்குன்னு இருக்குற பிரத்யேகமான ஒரு ஆப்பை அவங்க ஸ்மார்ட்  போன்ல இன்ஸ்டால் பண்ணணும். அவ்வளவுதான். அந்த ஆப்பை ஓபன் பண்ணினா ரயில்களோட மூவ்மென்ட்டைப் பார்க்க முடியும்!’’ என்கிறார் பாலமுருகன்.‘‘நம்ம அரசு முயற்சி இல்லாம இந்த வசதியை ரயில்கள்ல ஏற்படுத்த வாய்ப்பில்ல. பொதுவா, இப்படி ஒரு நவீன டெக்னாலஜியை யாரோ ஒரு ஃபாரின்  கம்பெனிகிட்ட இருந்து பல கோடி கொடுத்துதான் நாம வாங்க வேண்டியிருக்கும். 

             அதுக்கு இடம்தரக்கூடாது. டெக்னாலஜியை முதல்ல பயன்படுத்தி முன்னேறுற  நாடு நம்ம இந்தியாவா இருக்கணும்கிற ஆர்வமும் இந்தக் கண்டுபிடிப்புல இருக்கு. இதுக்கு காப்புரிமை கேட்டும் விண்ணப்பிச்சிருக்கோம். வருங்காலத்துல  நம்மகிட்ட இருந்து இந்த டெக்னாலஜியை உலக நாடுகள் வாங்கிக்கட்டும்!’’ எனப் பெருமை பொங்க முடிக்கிறார்கள் சதீஷ்!ரயிலே ஆச்சரியம்... ரயிலுக்குள் ஒரு ஆச்சரியம் இந்தக் கருவி




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive