Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னை பல்கலைக்கழக இளங்கலை, முதுநிலை தேர்வு முடிவு இன்று வெளியீடு

        சென்னை பல்கலைக்கழகம் நடத்திய இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளின் தேர்வு முடிவு இன்று(வியாழக்கிழமை) மாலை வெளியிடப்படுகிறது. முடிவை www.unom.ac.in., www.ideuom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.

         இளங்கலை மற்றும் முதுநிலை தேர்வு எழுதிய மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு 27–ந்தேதி முதல் ஜூலை 4–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இளங்கலை தேர்வு எழுதியவர்கள் 5 செமஸ்டர்களில் தேர்ச்சி பெற்று இந்த கடைசி தேர்வில் 1 பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை என்றால் உடனடி தேர்வுக்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம். அதுபோல முதுநிலை மாணவர்கள் 3 செமஸ்டர் தேர்வில் வெற்றி பெற்று இந்த தேர்வில் மட்டும் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களும் உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இளங்கலை மாணவர்களும், முதுநிலை மாணவர்களும் உடனடி தேர்வுக்கு ஆன்லைனில் 27–ந்தேதி முதல் ஜூலை 4–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மறுகூட்டலுக்கு ஆன்லைனில் 27–ந்தேதி முதல் ஜூலை 4–ந்தேதிவரை விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவல் சென்னை பல்கலைக்கழக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive