Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பதவி உயர்வை உதறிய ஆசிரியர்கள்காலி இடங்களை நிரப்ப மீண்டும் முயற்சி

          கடந்த மாதம், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்காக நடந்த கலந்தாய்வில், ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வை நிராகரித்ததால், 928 இடங்கள் நிரம்பவில்லை. இதை நிரப்ப, மீண்டும் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, புதிய முன்னுரிமை பட்டியலை, கல்வித்துறை வெளியிட்டுள்ளது.ஆக., 24ம் தேதி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் பங்கேற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பலரும், எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததால், பதவி உயர்வை நிராகரித்தனர்

               இதனால், 928 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரம்பவில்லை.இந்த காலி இடங்களை நிரப்ப, பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் அடங்கிய, புதிய முன்னுரிமை பட்டியலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:பட்டதாரி ஆசிரியருக்கும், முதுகலை ஆசிரியருக்கும் இடையே, சலுகை, சம்பளத்தில் பெரிய வித்தியாசம் கிடையாது. பதவி உயர்வை ஏற்றால், வேறு ஊருக்கு மாற்றலாக வேண்டுமே என பயந்து, பதவி உயர்வை வேண்டாம் என உதறி விடுகின்றனர்.விரைவில் நடத்த உள்ள பதவி உயர்வு கலந்தாய்விலும், அனைத்து இடங்களும் நிரம்புமா என்பது சந்தேகம் தான்.இவ்வாறு அவர் கூறினார்.


பாட வாரியாக காலியிடங்கள் விவரம்

  • தமிழ் 100
  • ஆங்கிலம் 160
  • கணிதம் 80
  • இயற்பியல் 100
  • வேதியியல் 70 
  • தாவரவியல் 63
  • விலங்கியல் 70
  • வரலாறு 143
  • வணிகவியல் 73
  • பொருளியல் 69
  • மொத்தம் 928




11 Comments:

  1. No difference salary between bt and pg.meendum promotion counseling nadayhinaalooda pg pogamaatanga....selection grade vaangittu thaan povaanga....pg torcher....

    ReplyDelete
  2. Pg trb varuma

    ReplyDelete
  3. 6th PC kku munnal (ie, before 01.01.2006) Spl. Grade 20 years service kku keezh nilai paniyaiyum serththu kanakkidappattadu. Tharpodu athu illathathala niraiya teachers promotion vendam enru relinguish seigirarkal. Intha salugai meendum kidaikkuma?

    ReplyDelete
    Replies
    1. supreme courtla tata stay vangittu

      Delete
    2. 6வது ஊதியக்குழுவுக்கு முன்னாலும் இல்லை, பின்னாலும் இல்லை. ஒரே பதவியில் பத்தாண்டுகள் முடித்தால் தேர்வு நிலையும், இருபது ஆண்டுகள் முடித்தால் சிறப்புநிலையும் வழங்கப்படும். 01-04-2013 க்கு முன்னால் தேர்வு நிலை, சிறப்புநிலைக்கு ஒரு ஊதிய உயர்வு கிடைக்கும். அதன்பின் இரண்டு ஊதிய உயர்வுகள் கிடைக்கின்றன. ஆனால் பதவி உயர்வுக்கு ஒரே ஊதிய உயர்வுதான். தற்போது பதவி உயர்வு வேண்டாம் என நிராகரித்தவர்களில் பெரும்பாலோர் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தேர்வு நிலை அல்லது சிறப்புநிலை அடைபவர்களாக இருப்பவர்கள்.இதுதான் உண்மையான காரணம்.

      Delete
    3. Selection grade peruvatharkuththan ore nilaiyil 10 yrs service mudithirukka vendum. But before 6th PC kizh nilaiyil selection grade vaangiya piragu pathavi uyarvu petravargal 20 yrs service mudiththa piragu (kizh nilai pani + pathavi uyarvil pani = 10 yrs) spl grade petrirukkiraargal. tharpothu athu illai.

      Delete
  4. Pg TRB date eppo announced

    ReplyDelete
  5. Pig TRB call far aaguma?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive